ETV Bharat / entertainment

தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் பாதிப்பில் உருவானதுதான் கிரீஷ்… ஹிருத்திக் ரோஷன்... - எனக்கும் லார்ட் ஆஃப் தி ரிங்ஸுக்கும் இடையே சிறிய தொடர்பு இருக்கிறது

தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ், தி ரிங்ஸ் ஆஃப் பவர் தொடரின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஹிருத்திக் ரோஷன் தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் பாதிப்பில் உருவானது தான் கிரீஷ் திரைப்படம் என்று தெரிவித்தார்.

தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் பாதிப்பில் உருவானது தான் கிரீஷ்

author img

By

Published : Aug 20, 2022, 11:58 AM IST

அமேசான் பிரைம் வீடியோவில் தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர் எனும் தொடர் செப்டம்பர் 2ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்தத் தொடரை ஆசிய பசிபிக் நாடுகளில் பிரபலப்படுத்துவதற்காக, மும்பையில் விளம்பர நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தொடரில் நடந்திருக்கும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் நடிகை தமன்னா இருவரும் கலந்து கொண்டனர்.

நடிகை தமன்னா பேசுகையில், ''லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ திரைப்படம் அதனுடைய சினிமா பாணியில் தனி கவர்ச்சியை கொண்டிருக்கிறது. இந்த காவியம் மீது உலக ரசிகர்கள் மத்தியில் பெரும் காதல் உள்ளது. அதனாலேயே தொடர்ந்து புதிதாக தோன்றுகிறது. இந்த திரைப்படம் வியக்கத்தக்க வகையிலான காட்சிகள் மூலம் கதையை எடுத்துச்செல்கிறது.

பார்வையாளர்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. ’லார்ட் ஆஃப் த ரிங்ஸ்: த ரிங்ஸ் ஆஃப் பவர்’ நான் பார்த்த படைப்புகளில் வசீகரிக்கும் படைப்பாகவும், மயக்கும் தொடராகவும் உணர்கிறேன்” என்றார்.

நட்சத்திர நடிகர் ஹிருத்திக் ரோஷன் பேசுகையில், ''தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ எனும் வரலாற்று காவியத்தின் ஒரு ரசிகனாக இந்தத் தொடரை காண ஆவலுடன் காத்திருக்கிறேன். செப்டம்பர் 2ஆம் தேதி பிரைம் வீடியோவில் இதை என்னால் பார்க்க முடியும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கும் லார்ட் ஆஃப் தி ரிங்ஸுக்கும் இடையே சிறிய தொடர்பு இருக்கிறது. இது பலருக்கு தெரியாது.

இந்த தொடரின் முழு தொகுப்பையும் பார்த்துவிட்டு என் தந்தை என்னை அழைத்தார். நாங்கள் ‘கொய் மில் கயா’வை உருவாக்கினோம். இதன் மூலமாகவே ‘கிரீஷ்’ கதாப்பாத்திரம் உருவானது. எனவே தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் ஆசிரியருக்கு என்னுடைய சிறிய அளவிலான நன்றி” என்றார்.

இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் படத்தின் 2ஆவது பாடல் ‘சோழா சோழா’ வெளியானது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.