பெங்களூரு: கேஜிஎஃப் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, கேஜிஎஃப் இரண்டாம் பாகம் ஏப்.14ஆம் தேதி உலகெங்கிலும் தியேட்டர்களில் வெளியானது.
இந்திய அளவில் வெளியான இந்தப் படம் வசூலில் ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது. அந்த வகையில் ஆயிரம் கோடி வசூலித்த 4ஆவது படம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் ஆமிர் கானின் தங்கல், பிரபாஸ் நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி இரண்டாம் பாகம் மற்றும் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் ஆகிய படங்கள் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்துள்ளன.
இந்த வரிசையில் கேஜிஎஃப் இரண்டாம் பாகமும் இணைந்துள்ளது. இந்தப் படம் இந்தியின் மட்டும் 416.60 கோடி வசூலித்துள்ளது. இது தொடர்பாக சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா ட்விட்டரில், “ஆயிரம் கோடி வசூல் படங்களில் வரிசையில் கேஜிஎஃப் இணைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் இந்தியில் மூன்றாவது பெரிய வசூல் படம் என்ற பெருமையையும் கேஜிஎஃப் பெற்றுள்ளது. இதற்கு முன்னர் டைகர் ஸிந்தா ஹை, பிகே, சஞ்சு உள்ளிட்ட படங்கள் பெருமளவு வசூலித்திருந்தன. நீல் சோப்ரா இயக்கத்தில், யஷ் நடித்திருந்த கேஜிஎஃப் முதல் பாகமும் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பெரும் வெற்றியை பதிவு செய்தது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : கேஜிஎஃப் படத்துடன் பீஸ்ட்டை ஒப்பிட வேண்டாம் - நடிகர் கூல் சுரேஷ்!