புதுமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கணம்' படத்தில் அமலா, ஷர்வானந்த், நாசர், ரீத்து வர்மா, சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. டைம் டிராவல் கதையில் அம்மா சென்டிமென்ட் கலந்து சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
புதுமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் தனது தாயின் நினைவாக இக்கதையை எழுதியதாகப் பேட்டிகளில் தெரிவித்து இருந்தார். அதன்படி ஷர்வானந்த், அமலா இடையேயான அம்மா, மகன் காட்சிகள் ரசிகர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளன.
'இன்று நேற்று நாளை' படத்தைப் போன்று கடந்த காலத்திற்கு செல்லும் டைம் டிராவல் கதையான இதில் இயக்குநர் ஸ்ரீகார்த்தியின் அருமையான திரைக்கதை படத்தை ரசிக்க வைத்துள்ளது என்கின்றனர், படம் பார்த்தவர்கள். நடிகர்களின் நடிப்பும் சிறப்பாக உள்ளதால் இந்த வாரம் வெளியான படங்களில் வெற்றிப்படமாக இது அமைந்துள்ளது.
இதையும் படிங்க: அப்பாவை பழைய பாரதிராஜாவாக பார்க்கலாம்... மனோஜ் பாரதிராஜா...