ETV Bharat / entertainment

‘நாயகன் மீண்டும் வர்றான்’ - 35 வருடத்திற்கு பின் மணிரத்னத்துடன் இணையும் கமல் ஹாசன் - Kamal Hassan and Mani Ratnam

நடிகர் கமல் ஹாசனின் 234ஆவது படத்தை இயக்குநர் மணி ரத்னம் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Etv Bharat‘நாயகன் மீண்டும் வர்றான்’ - 35 வருடத்திற்கு பின் மணிரத்னத்துடன் இணையும்  கமல்

author img

By

Published : Nov 6, 2022, 7:39 PM IST

Updated : Nov 6, 2022, 8:32 PM IST

சென்னை: உலக நாயகன் கமல் ஹாசனின் 68ஆவது பிறந்தநாள் நாளை (நவ. 7) கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளையொட்டி இன்று (நவ. 6) அவரது KH 234 படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து கமல் ஹாசன் தனது ட்விட்டரில் இதோ மீண்டும் செல்ல உள்ளோம், பயணத்தின் அடுத்தக் கட்டம் என்று அவரது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இப்படத்தை கமல் ஹாசன், மணிரத்னம், ஆர் மகேந்திரன் மற்றும் சிவா ஆனந்த் ஆகியோர் தங்களது ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனத்தின் கீழ் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

35 வருடங்களுக்கு முன்பு மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான நாயகன் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இன்றளவும் பேசப்பட்டுவருகிறது. அதன்பின் தற்போது மீண்டும் இணைய உள்ளனர். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். இது ஏ.ஆர். ரகுமான், கமல் ஹாசன், மணி ரத்னம் இணையும் புது கூட்டணி என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இதையும் படிங்க:'மதம் வைத்து அரசியல் செய்பவரை பதம் பார்க்க வந்தவரே...!' - வைரல் ஆகும் கமல் போஸ்டர்

Last Updated : Nov 6, 2022, 8:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.