ETV Bharat / entertainment

'நிரூபிக்கவில்லையென்றால் நிர்வாணமா நடப்பியா...?' - பயில்வான் ரங்கநாதன் ஆவேசம் - பயில்வான் ரங்கநாதன்

தன்னைப் பற்றி அவதூறு கூறியதாக தயாரிப்பாளர் கே.ராஜன் மீது நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சென்னை காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

’நிரூபிக்கவில்லையென்றால் நிர்வாணமா நடப்பியா...?’ - பயில்வான் ரங்கநாதன் ஆதங்கம்

author img

By

Published : May 9, 2022, 7:29 PM IST

Updated : May 9, 2022, 7:55 PM IST

சென்னை: சினிமா தயாரிப்பாளர் கே. ராஜன் தன்னைப் பற்றி பொய்யான கருத்துகளை தெரிவிப்பதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் சென்னை காவல் ஆணையர் புகார் அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் பயில்வான் ரங்கநாதன், ”எந்தப் படத்தையும் தயாரிக்காத காலிப் பெருங்காய டப்பா தயாரிப்பாளர் கே.ராஜன். அவர் என்னைப்பற்றி கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. நான் நடிகர், நடிகைகளிடம் பிளாக்மெயில் செய்து பணம் வாங்கியதாக கே.ராஜன் நிரூபித்துவிட்டால் தொழிலை விட்டுச்செல்கிறேன். அப்படி இல்லையென்றால் அவர் நிர்வாணமாக செல்லத் தயாரா..?.

யூ-ட்யூப்பில் நான் கூறும் கருத்துகள் காவல் துறையினருக்கே அதிகம் பிடிக்கும். அதைப் பல காவலர்களே என்னிடம் கூறியுள்ளனர். என்னைத் தாக்க வந்தால் அரிவாளால் வீசுவேன். நான் தூத்துக்குடிகாரன். கோழை அல்ல..!. சினிமாவில் ஒழுக்கமாக வாழ்பவர்களில் நானும் ஒருத்தன். யூ-ட்யூப் மூலம் பலரை சந்தோஷப்படுத்துவதால் மில்லியன்கணக்கானோர் என்னைப் பின்பற்றுகின்றனர். தயாரிப்பாளர் கே.ராஜன் யூ-ட்யூப்பில் பேசுவதை சில நூறு பேர்கள் மட்டுமே கேட்பதால், அந்தக் காழ்ப்புணர்ச்சியில் என்னைப் பற்றி அவதூறாகப் பேசுகிறார்” எனக் குற்றம்சாட்டினார்.

’நிரூபிக்கவில்லையென்றால் நிர்வாணமா நடப்பியா...?’ - பயில்வான் ரங்கநாதன் ஆதங்கம்

மேலும், பத்திரிகையாளர்கள் பல கேள்விகள் கேட்கையில், பதிலளிக்க முடியாமல் திணறிய பயில்வான் ரங்கநாதன், அதன் பின் சமாளித்து பேட்டியை முடித்துக்கொண்டார். இவர் பல யூ-ட்யூப் சேனலில் திரையுலக பிரபலங்களைப் பற்றிய அந்தரங்க செய்திகளைப் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஹாஸ்டாரில் வெளியாகும் நயன்தாராவின் 'O2'..!

Last Updated : May 9, 2022, 7:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.