சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், ஜிகர்தண்டா. இப்படம் வெளியாகி சிறந்த படம் என்ற பெயரைப் பெற்றது. அதுமட்டுமின்றி பாபி சிம்ஹாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க உள்ளதாக ஏற்கெனவே கூறப்பட்ட நிலையில், இதற்கான முதற்கட்டப் பணிகளை கார்த்திக் சுப்புராஜ் கடந்த ஆண்டு தொடங்கினார். இதனையடுத்து வரும் 11ஆம் தேதி இப்படத்திற்கான பூஜை மதுரையில் நடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இப்படத்தில் சித்தார்த்திற்குப் பதிலாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, நிமிஷா சஜயன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். மேலும் இது ஜிகர்தண்டா படத்தின் தொடர்ச்சியாக இருக்காது என கூறுகின்றனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அவதார்-2 தீம் சாங்கை வெளியிட்ட கனடா பாடகர் தி வீக்கெண்ட்