ETV Bharat / entertainment

Jawan collection: பாக்ஸ் ஆபிஸில் ரூ.240 கோடி வசூல் செய்து சாதனை படைத்த ஜவான்!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் 240 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 9:05 PM IST

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் கடந்த 7ஆம் தேதி வெளியானது. ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜவான் இந்தி, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அட்லீ இயக்கியுள்ள ஜவான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்திய அளவில் முதல் நாளில் ஜவான் திரைப்படம் 75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ஜவான் இந்தி மொழியில் மட்டும் 65 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. முன்னதாக ஷாருக்கான் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான பதான் திரைப்பட வசூல் சாதனையை ஜவான் முறியடித்தது.

இப்படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் இசையும் பக்கபலமாக அமைந்துள்ளது. ஜவான் திரைப்படம் தென் இந்திய அலவில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆரம்பம், மெர்சல், கத்தி, உள்ளிட்ட பல படங்களின் காட்சிகளை சேர்த்து அட்லீ ஜவான் படத்தை உருவாக்கியுள்ளார் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். அதே நேரத்தில் ஜவான் படத்தை வட இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

முதல் நாளில் உலகம் முழுவதும் ஜவான் திரைப்படம் 129 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில் இன்று மொத்தமாக உலக அளவில் ஜவான் திரைப்படம் 240 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் டிக்கெட் விற்பனை அதிகரித்துள்ளதால் ஜவான் திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு பாக்ஸ் ஆபிஸில் சோபிக்காத நிலையில் ஷாருக்கான் இந்த வருடம் நடித்த பதான், ஜவான் ஆகிய இரண்டு படங்களும் அதிக வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில் ஷாருக்கான் அடுத்து ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் நடித்து வரும் டுங்கி திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "முரளிதரன் பெருமையை பேசும் படமாக 800 திரைப்படம் இருக்காது" - இயக்குநர் ஸ்ரீபதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.