ETV Bharat / entertainment

இளையராஜா பாடல்கள் தன்னம்பிக்கை பாடல்களாக இருந்துள்ளது...இயக்குனர் ரஞ்சித்

இளையராஜா பாடல்கள் தன்னம்பிக்கை பாடல்களாக இருந்துள்ளதாக இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ராஜாவை தினம் தினம் ரசிப்பவன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இளையராஜாவின் பாடல்கள் எனக்கு தன்னம்பிக்கை பாடல்களாக இருந்திருக்கிறது

author img

By

Published : Aug 20, 2022, 12:31 PM IST

இயக்குனர் பா.இரஞ்சித் சார்பட்டா பரம்பரரை படத்திற்கு பிறகு "நட்சத்திரம் நகர்கிறது" என்னும் படத்தை இயக்கியுள்ளார். யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன், மற்றும் மனோஜ் லியோனல் ஜாசன் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஹரி, ஷபீர், உட்பட பலர் நடித்துள்ளனர். குண்டு படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கிஷோர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தென்மா இசையமைத்துள்ளார்.

படம் பற்றி இயக்குனர் பா.ரஞ்சித் கூறியதாவது, "நட்சத்திரம் நகர்கிறது" காதல் படம் அல்ல காதலைப் பற்றிய படம். ஆணும் பெண்ணும் சந்திக்கும் போது காதலாகத்தான் ஆரம்பமாகிறது. அது குடும்பத்துக்கு தெரியும் போதுதான் சமூகத்தின் பிரச்சனையாக மாறுகிறது. இங்கே காதலுக்கு ஒரு மதிப்பீடு இருக்கு. காதல் வர்க்கத்தையும் ஜாதியையும் பின்னி பிணைந்ததாக இருக்கிறது.

காதல் பெர்சனலாக இருக்கும்பொழுது எந்த பிரச்சனையும் இல்லை. இப்போ காதலை ஒரு பொலிட்டிக்கல் டெர்ம் ஆக மாற்றி வைத்துள்ளார்கள். அதை பற்றி விவாதிக்கின்ற படம்தான் "நட்சத்திரம் நகர்கிறது". இதில் ஆண் பெண் காதல் மட்டும் இல்லாது ஒரு பாலின காதலைப் பற்றியும், திருநங்கையின் காதலைப்பற்றியும் பேசுகிறோம்.

பாண்டிச்சேரியில் நாடக தியேட்டரில் நடிக்கக் கூடுகிற நடிகர்களின் எமோஷனல், காதலை விவரிக்கிறது இந்தப்படம்.
ஒரு காதலை குடும்பமும் சமூகமும் எப்படிப் பார்க்கிறது என இந்த படம் முழுக்க பேசுகிறோம். நான் இந்த கதையை நவீன சினிமாவின் தாக்கத்தில் எழுதியிருக்கிறேன்.

இசைஞானி இளையராஜாவுடன் இணைவீர்களா என்கிற கேள்விக்கு, எனக்கு ரொம்ப பிடித்தவர்களை தூர நின்று பார்ப்பேன். இசைஞானியோடு இணைந்து வேலை செய்ய முடியும் என இன்று வரை நான் நினைத்ததில்லை. அவரிடம் நெருங்கவே தயக்கமாக உள்ளது.
அவர் பெரிய மேதை. இசைஞானி இளையராஜா இல்லையென்றால் நான் இங்கு வந்திருக்கவே முடியாது. அவர் பாடல்கள் எனக்கு சினிமா பாடல்கள்களாய் இல்லாமல் தன்னம்பிக்கை பாடல்களாக இருந்திருக்கிறது. ராஜாவை தினம் தினம் ரசிப்பவன் நான்" என கூறினார்.

"நட்சத்திரம் நகர்கிறது" படம் இதுவரை நான் எழுதி எடுத்த சினிமாவில் இது மாறுபட்டு இருக்கும். என்னுடைய சினிமா வாழ்க்கையிலும் இது முக்கியமான படமாக இருக்கும் என்று பா ரஞ்சித் கூறினார். இப்படத்தில் பாடல்கள் உமாதேவி, அறிவு எழுதியுள்ளனர். செல்வா RK படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

இதையும் படிங்க: ’கோப்ரா படத்தில் ஏழு கெட்டப்கள் திணிக்கப்பட்டதல்ல...!’ - விக்ரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.