ETV Bharat / entertainment

"கர்வத்தை விட்டுவிட்டேன்; இன்று சிலருக்கு இசையமைக்கவே வரல" - இளையராஜா கருத்து

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 1:03 PM IST

Updated : Jan 5, 2024, 2:00 PM IST

Ilaiyaraaja: மால்யத நூல் வெளியீட்டு விழாவில் பேசிய இளையராஜா, 'இன்னிக்கு ஒரு பாட்டு பன்றதுக்கு 6 மாசம் ஆகுது.. சிலருக்கு இசையமைக்கவே தெரியலை.. கைத்தட்டல் ஜாஸ்தி ஆக ஆக கர்வம் தலைக்கேறியதாகவும், அதையெல்லாம் தூக்கி எறிந்து விட்டதாகவும், இசைஞானி என்ற பெயருக்கு எனக்கு தகுதி இருக்கானா? அது கேள்விக்குறிதான்' எனவும் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: ஆண்டாள் திருப்பாவையை விவரிக்கும் மால்யத என்கிற ஆங்கில நூல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று (ஜன.4) நடைபெற்றது. இவ்விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இசை அமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்த விழாவில் பேசிய இளையராஜா கூறியதாவது, “எனக்கு தமிழ் இலக்கிய அறிவோ, மொழி அறிவோ அவ்வளவு கிடையாது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். நான்‌ முதல் முதலாக இசை அமைக்க சென்னை வருகிறேன். ஒரு படத்திற்கு இசை அமைக்கிறேன். அப்படத்தின் பின்னணி இசைக்காக என்னிடம் வருகிறது.

முதல் ரீலில் கதாநாயகியை அறிமுகப்படுத்துகிறார்கள். கதாநாயகி டூரிங் டாக்கீஸில் ஒரு படம் பார்க்கிறார். அதில் ஆண்டாளின் நடனம் ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆண்டாளை‌ப் பார்த்து மெய் மறந்து கதாநாயகி நிற்கிறாள். அந்த பாடலில் ஒரு இடத்தில் ஒலி இன்றி மௌனமாக இருக்கிறது. அதற்கு நான் இசை அமைக்க வேண்டிய சூழல். நான் ஏதோ ஒன்றை தேடிப்பிடித்து இசை அமைத்து விட்டேன். எனது முதல் படத்திலேயே ஆண்டாள் எனக்கு அருள் புரிந்து விட்டாள்.

நான் சிவ பக்தன். எனது உண்மை‌ பெயர் ஞானதேசிகன். அது ராசைய்யா என்றாகி, பின்னாளில் இளையராஜா என்று மாறிவிட்டது. நான் 'இசைஞானி' என்ற பெயருக்கு தகுதி ஆனவனா என்றால், என்னைப் பொறுத்தவரை அது கேள்விக்குறிதான். மக்கள் 'இசைஞானி' என்று அழைக்கிறார்கள். ஓகே நமஸ்காரம்.

நான் என்னை அந்த மாதிரி நினைக்கவில்லை. அதில், எனக்கு ஒரு கர்வமும் கிடையாது. கர்வத்தை எல்லாம் சிறுவயதிலேயே தூக்கி எறிந்து விட்டேன். ரசிகர்கள் கைதட்ட கைதட்ட, எனக்கு கர்வம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. மக்கள் எதற்காக கைதட்டுகிறார்கள் என்று தெரிந்த பின், என் தலையில் இருந்த பாரம் எல்லாம் இறங்கிவிட்டது.‌ கர்வத்தில் இருந்து எப்போதோ விடுபட்டுவிட்டேன். எந்த புகழும், பாராட்டும் என்னை ஒட்டுவதில்லை. எனக்கு அந்த சிந்தனையே கிடையாது. நான் சிவ பக்தன்” என்று பேசியுள்ளார்.

மேலும் பேசிய அவர், 'ஒரு ஸ்டேஜ்ல வந்து கைதட்டுவது பாட்டுக்காகவா, இல்லை திறமைக்காகவா என மனசுக்குள் வந்து ஒரு கேள்வியை எழுப்பியது. இது ட்யூனுக்காகத்தான் கைத்தட்டுறாங்க. இன்னிக்கு ஒரு பாட்டு பன்றதுக்கு 6 மாசம் ஆகுது, சிலருக்கு இசையமைக்கவே வரல. இது என்னப் பாடல்னா, சினிமா பாடல்தான் வாசிப்பேன். இப்போ, இந்த கைத்தட்டல் யாருக்குப் போகுதுனா? இந்த பாட்டுக்குத்தான் போகுது. பாட்டு யார் போட்டது? எம் எஸ் விஸ்வநாதன் சார் போட்டார். அப்போ இந்த கைத்தட்டல் விஸ்வநாதன் சாருக்குப் போகுது.

அப்பாடா, என் தலையில் இருந்த பாரமெல்லாம் இறங்கிப் போனது. நமக்கும், இதுக்கும் சம்பந்தமில்லை. ஜனங்கள் அவங்கபாட்டுக்கு ரசிக்கிறதுக்கு த்தட்டுறாங்க. இந்த கர்வத்தில் இருந்து எப்போதோ நான் விடுபட்டுவிட்டேன். அதனால், எந்த புகழ் மொழியும், எந்த பாராட்டுகளும் ஒன்னும் ஒட்டல. எனக்கு இல்லை, அத பத்தின சிந்தனையே கிடையாது.

என்னுடைய வேலை காலை 4 மணிக்கு தொடங்கும். ஒரு நாளைக்கு 2 பாடல்களும், சில நாட்களுக்கு 3 பாடல்களும் ரெக்கார்ட் பண்ணுவேன். ஒரே நாளில் 3 படங்களுக்கு பின்னணி இசையே அமைத்துள்ளேன். இது என்னுடைய திறமையை சொல்வதற்காக அல்ல. அவங்களுக்கு நெருக்கடி தீபாவளிக்கு ஒரு படம் ரிலீஸ் ஆகணும் எனில், எங்களுக்கு பேக்ரவுண்ட்லாம் முடிச்சு ரிலீஸ் பண்ண முடியும்னு சொல்லி ஐந்து, ஆறு புரொடியூஷர்ஸ் நிப்பாங்க..

ஆனால், மூன்று படத்திற்கு கண்டிப்பாக செய்து தீர வேண்டுமென்றபோது, மூன்று ரெக்கார்டிங் தியேட்டர்களில் புக் செய்தேன். மூன்று ஆர்க்கெஸ்ட்ராவுக்கும், கண்டக்டர்களுக்கும் இன்ஃபார்ம் பண்ணினேன். மேலும், நாளொன்றுக்கு மூன்று படங்களுக்கு 14 ரீல் என பின்னணி இசை அமைத்தவர்கள் உலகத்திலேயே யாரும் கிடையாது' எனப் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: கேப்டன் மில்லர் பட விழாவில் அத்துமீறலா? ஐஸ்வர்யா கூறுவது என்ன?

Last Updated : Jan 5, 2024, 2:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.