ETV Bharat / entertainment

'தசாவதாரம் படத்துக்குத் தேவி ஸ்ரீ பிரசாத் கொடுத்த இசையை பார்த்து வியந்து விட்டேன்' - கமல்ஹாசன்! - kamal haasan

'ஓ... பெண்ணே' பாடலை வெளியிட்ட கமல்ஹாசன் தசாவதாரம் படத்துக்குத் தேவி ஸ்ரீ பிரசாத் கொடுத்த இசையைப் பார்த்து வியந்து விட்டேன் என கூறியுள்ளார்.

தசாவதாரம் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் கொடுத்த இசையை பார்த்து வியந்து விட்டேன்

author img

By

Published : Oct 9, 2022, 7:51 PM IST

குல்ஷன் குமார் டீ சீரிஸ் பூஷன் குமார் வழங்கும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் எழுதிப் பாடிய பாடல் ‘ஓ... பெண்ணே’. பான் இந்தியா பாடலாக வெளியாகும் ஓ பெண்ணே பாடலை தமிழில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், முதலில் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்தவர். அவருக்கு இசை என்றால் உயிர். நீங்கள் கொடுத்த உற்சாகம் தான் முக்கிய காரணம் எனவும், போனில் கூட தொடர்பு கொண்டு அக்கறையுடன் விசாரிப்பார். நினைத்தால் நிச்சயம் உங்களால் முடியும் என்றும் கமல்ஹாசன் கூறுவதாக தேவி ஸ்ரீ பிரசாத் பேசினார்.

இந்த புது முயற்சி உங்கள் முன் துவங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை பல மொழிகளில் எடுக்க வேண்டும் என்பது நீண்ட கால கனவு. நிறைய இசை கலைஞர்களைப் பார்த்திருக்கிறேன். தனிப்பட்ட இசை கலைஞர்களுக்கு இது போன்ற முயற்சி செய்து கொண்டு வர வேண்டும் என்றும் பல மொழிகளில் கமல்ஹாசனுக்கு ஆர்வம் இருக்கிறது எனவும், இனி வரக்கூடிய இசை கலைஞர்கள் பல மொழிகளில் பாடல்களைக் கொடுக்க வேண்டும் எனவும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூறினார்.

இது பான் இந்தியா பாப் பாடல். இதை ஒவ்வொரு மொழியிலும், ஹிந்தியில் ரன்வீர் துவங்கி வைத்தார். நன்றாக பிரபலமாகி கொண்டாடி வருகின்றனர் என்றும், பிரபு தேவா மாஸ்டர் கூட ஓ பெண்ணே பாடலை பார்த்து பாராட்டினார். ஓ போரி கன்னடா மற்றும் ஓ பெண்ணே மலையாளத்தில் அடுத்த சில தினங்களில் வெளியாகும் என்று கூறினார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ஆரம்பங்களுக்கு இது நல்ல இடம். அற்புதமான இடம். முதலில் கன்னட படம் ஒன்றுக்கு உதவி நடன இயக்குநராக இருந்தேன். இவருக்கு நான் அண்ணனா, சித்தப்பாவா என்பது எனக்குக் குழப்பமாக இருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் அப்பா எனக்கு நண்பர். அப்போது முதல் அவரை தெரியும். இவரை எனக்கு அப்போது தெரியாது. இவர் குரு மாண்டலின் சீனிவாசன். அவர் சிறிய பையனாக மேடையில் வாசிக்கும் போது கண்டு வியந்திருக்கிறேன்.

அவருடைய சீடனாக இவரும் என்னை வியக்க வைக்கிறார். இவருக்கு வெற்றி வந்தே ஆக வேண்டும். அது தாமதமாக வருவதாக எனக்கு தோன்றுகிறது. தசாவதாரம் படத்துக்கு இவர் கொடுத்த இசை பார்த்து வியந்து விட்டேன் என்றும், இன்னமும் அந்த புஷ் இவரிடம் இருக்கிறது, புஷ்பா கொடுத்த புஷ் ஆக கூட இருக்கலாம். ஆனாலும் அமைதியாக இருந்து தனது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார் என்று பாராட்டினார்.

இது சிறந்த இசை கலைஞர்களின் குணாதிசயம். எம் எஸ் விஸ்வநாதனின் சந்தித்து வந்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும். இளையராஜாவைப் பார்த்தால் கொஞ்சம் பதட்டமாக இருக்கும். பயமாக இருக்கும். உள்ளே போனால் கொஞ்சம் சத்தமாக பேசலாமா, வேண்டாமா என்றிருக்கும். ஆனால் அவர் கொடுக்கும் இசை வேறு. நான் பேசாமல் இருந்தால் அவர் கொடுப்பதை கொடுப்பார். நான் இவருக்கு எப்படியோ அதே போலவே இளையராஜாவுக்கும் பெரிய ரசிகன் நான்.

இவருடைய ஸ்டுடியோவில் இளையராஜா போட்டோ இருக்கும். அப்படி நல்ல கலைஞர்களைப் பார்த்து காதல் மோகம் எல்லாம் இவருக்கு இருக்கிறது. அதற்கு மதிப்பு கொடுப்பது எங்கள் கடமை. அதைத்தான் நான் இங்கு செய்து கொண்டிருக்கிறேன். நான் இவருடன் பணியாற்றியது இவருடைய திறமையை பார்த்துதான். இவர் எடுத்த இந்த முயற்சியில் எவ்வளவு முக்கியமானது என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.

தசாவதாரம் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் கொடுத்த இசையை பார்த்து வியந்து விட்டேன்

அப்போதே சி.எஸ் சிவபாக்யம் அவர்களை வைத்து எடுத்த பாடல் ஹிட் ஆனது. பல கலைஞர்களின் தனிப் பாடல் சினிமா பாடலை விட வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் சினிமா வந்த பிறகு எல்லாம் மாறிவிட்டது. தமிழ் சினிமாவில் தனி சிந்தனைக்குள் இசை அமைப்பது புது இசை வரும் ஆனால் ஒரு வட்டத்தில் சுற்றி கொண்டு இருப்பது வருத்தமாக உள்ளது. இளையராஜா கூட அதற்குள் சிக்கி கொண்டார் என்றும், அது போல இசை கலைஞர்கள் நிமிர்ந்து நிற்க வேண்டும்.

அமெரிக்காவில் சினிமா நட்சத்திரங்களை விட தனி இசை கலைஞர்கள் பெரிய பணக்காரர்களாக இருக்கின்றனர். உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு இந்தியா. சினிமாவில் பெரிதாக வரும் வாய்ப்பு இசைக்கு இருக்கிறது. இவர்கள் சிற்பியை போன்றவர்கள். தனித் துறையை இவர்கள் உருவாக்க வேண்டும் எனவும், இதன் மூலம் பல விதமான இசை கிடைக்கும். சீர்காழி பரமக்குடிக்கு வரும் போது சினிமா பாடலை பாடாமல் தன்னுடைய பாடல்களை பாடுவார். அதற்கு பெரிய கூட்டம் வரும் எனவும், தமிழிலும் பெரிய இசையமைப்பாளராக இன்னும் வளர வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆரம்பிச்சாச்சு பிக்பாஸ் - போட்டியாளர்கள் விவரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.