ETV Bharat / entertainment

ஆஸ்கர் விருதை நான் ஒரு பெரிய விருதாக நினைத்தது கிடையாது - இயக்குநர் அமீர்! - இந்தியாவிலேயே மிகச் சிறந்த நடிகர் சிவாஜி கணேசன்

'ஆஸ்கர் விருது பெரிய விருது என்று என்றைக்கும் நான் நினைத்தது இல்லை. அது எல்லோராலும் பார்க்கப்படுவதால் முக்கியத்துவம் பெறுகிறது; அது அந்த நாட்டின் தேசிய விருது' என இயக்குநர் அமீர் கூறினார்

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 17, 2023, 9:14 PM IST

சென்னை: ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள ’செங்களம்’ இணைய தொடரின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்த இணைய தொடரின் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன், இயக்குநர் அமீர், வாணி போஜன், டேனியல், விஜி சந்திரசேகர், பிரேம், கஜராஜ், இசையமைப்பாளர் தரண் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வரும் 24ஆம் தேதி ’செங்களம்’ ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

நடிகை வாணி போஜன் பேசுகையில், “ஜீ5 என்று சொன்னவுடன் உடனே ஓகே சொல்லிவிட்டேன். இந்த கதாபாத்திரம் எனக்கு சரியாக இருக்குமா என்று கேட்டார்கள். முதலில் நான் நடிக்கிறேன் என்றேன். ஆனால், அதன்பிறகு தனிப்பட்ட காரணங்களுக்காக இதில் நடிக்கவில்லை என்றேன். ஆனால் தயாரிப்பு நிறுவனம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.

படப்பிடிப்பு சமயத்தில் நிறைய தொல்லை கொடுத்துள்ளேன். அதற்காக மேடையில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதில் நடிக்கும்போது நாமும் அரசியலுக்கு வந்துவிடலாமா என்று தோன்றும். செங்களம் வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்

எஸ்.ஆர்.பிரபாகரன் பேசுகையில், “சசிகுமார், அமீர் இருவரும் எனக்கு அண்ணன்கள். இது எனது முதல் இணையத் தொடர். கரோனா சமயத்தில் இந்த கதையை ஜீ5 நிறுவனத்திடம் சொன்னேன். அவர்கள் இதனை இணையத் தொடராக எடுக்க சொன்னார்கள். செங்களம் ஒரு அரசியல் பின்னணி கொண்ட கதை.

இதை பார்க்கும் போது நிறைய அரசியல் பிரமுகர்கள் உங்களுக்கு தெரிவார்கள். அரசியலில் உள்ள துரோகத்தைப் பற்றி இந்த கதை பேசுகிறது. இந்த படத்தை பார்த்துவிட்டு வாணி போஜன் எந்த கட்சியில் சேரப்போகிறார் என்று நிறைய பேர் கேட்பார்கள்” எனப் பேசினார்

இயக்குநர் அமீர் பேசுகையில், ”இந்த விழாவிற்கு வந்ததன் முதல் காரணம் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன். மேடையில் இருப்பவர்கள் அனைவரும் நான் ரசித்தவர்களும் என்னை ரசிப்பவர்களும் உள்ளனர். 80களில் வருவது போல் இப்போது எல்லாம் கதை எழுதவே முடியாது.

நான் ’ஆதிபகவன்’ படம் இயக்கும் போது சிவப்பு கம்பளம் என்ற படத்தை என்னை வைத்து இயக்க எஸ்.ஆர்.பிரபாகரன் முன் வந்தார். அக்கதையில் எனக்கு உடன்பாடு இல்லாததால் அதில் நடிக்கவில்லை. இன்னமும் அந்தக் கதை என் மனதில் இருக்கிறது. செங்களம் கதையும் என்னை நினைத்து தான் இந்த இயக்குநர் எழுதியுள்ளார். இப்போதே இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் வெற்றி பெற்று விட்டார். எனக்கு அரசியல் ரொம்ப பிடிக்கும். உயிர் தமிழுக்கு என்ற அரசியல் த்ரில்லர் படம் எடுத்து வருகிறேன்” எனக் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் அமீர் கூறியதாவது, “இந்திய திரைப்படங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்ததற்கு எனது வாழ்த்துகள். அதில் அரசியல் இருக்கிறதா இல்லையா என்று ஆராய்வது நமது வேலை கிடையாது. கலைக்கு அரசியல் கிடையாது. அந்த வகையில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது பெருமை.

ஆனால் என்னை பொறுத்தவரையில் ஆஸ்கர் விருது பெரிய விருது என்று என்றைக்கும் நான் நினைத்தது இல்லை. அது எல்லோராலும் பார்க்கப்படுவதால் முக்கியத்துவம் பெறுகிறது. அது அந்த நாட்டின் தேசிய விருது என்று நினைத்துக் கொள்ளலாம். இருந்தாலும் அங்கேயும் இந்திய படங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது எனக்கு கிடைத்தது போன்று நினைத்துக்கொள்கிறேன்.

எனக்கு தெரிந்து ஒரு 30 ஆண்டுகளுக்கு முன் விருதுகளுக்கான அங்கீகாரம் வேறு. இப்போது எல்லா விருதுகளிலும் அரசியல் உள்ளது. தேசிய விருது, மாநில‌ விருது, தனியார் நடத்தும் விருது இப்படி எல்லாவற்றிலும் அரசியல் உள்ளது. இந்தியாவிலேயே மிகச் சிறந்த நடிகர் சிவாஜி கணேசன். ஹாலிவுட் நடிகர்களே அவரிடம் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள விரும்பினர். ஆனால், அவருக்கு ஒரு தேசிய விருது கூட வழங்கப்படவில்லை. இங்கு அப்படித்தான் இருக்கிறது. விருதுகள் எல்லாமே லாபிதான்” எனக் கூறினார்

இதையும் படிங்க: 'கண்ணை நம்பாதே' படத்தில் ஜெயலலிதா, பாஜக குறித்து ஆட்சேபனை வசனம் - இயக்குனர் மாறன் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.