ETV Bharat / entertainment

அவரைப் பற்றி பேச விரும்பவில்லை - வெற்றிமாறன் குறித்த கேள்விக்கு 'ஜகா' வாங்கிய குஷ்பூ - வெற்றிமாறன் பேச்சு

இயக்குநர் வெற்றிமாறன் ராஜராஜ சோழன் இந்து அரசனாக அடையாளப்படுத்தப்படுகிறார் எனப் பேசியது குறித்த கேள்விக்கு நடிகை குஷ்பூ கருத்து உரைத்துள்ளார்.

அவரைப் பற்றி பேச விரும்பவில்லை- வெற்றிமாறன் குறித்த கேள்விக்கு குஷ்பு பதில்

author img

By

Published : Oct 4, 2022, 4:03 PM IST

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 60ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய இயக்குநர் வெற்றிமாறன், 'ராஜராஜ சோழனை ஒரு இந்து அரசனாக அடையாளப்படுத்த நினைக்கிறார்கள்' எனப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பேசு பொருளாகி உள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்துப்பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நடிகை குஷ்பூ வெற்றிமாறன் பற்றி, தான் பேச விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

கோவை சரளா நடித்துள்ள 'ஒன் வே' திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பூவிடம், வெற்றிமாறன் ராஜராஜ சோழனுக்கு இந்து அடையாளங்கள் கொடுக்கப்பட்டுள்ளது எனக்கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப்பதிலளித்த குஷ்பூ, "அது ஒவ்வொருவருடைய பார்வையைப் பொறுத்தது. வெற்றிமாறன் பற்றி நான் பேச விரும்பவில்லை" என்றார்.

தொடர்ந்து பொன்னியின் செல்வனையும் பாகுபலியையும் ஒப்பிடுவது பற்றி கேட்கப்பட்ட போது "தமிழ்ப்படம், தெலுங்கு படம் என நாம் பார்க்கவேண்டாம். அது ஒரு இந்தியப் படம். ஒரு தமிழராக இப்படியான ஒரு வரலாற்றை பதிவு செய்ததில் நாம் பெருமைப்பட வேண்டும். மணிரத்னம் ஒரு படம் செய்கிறார் என்றால், அதைப்பற்றி ஆராயாமல் செய்யமாட்டார். படத்தில் குறைகள் இருக்கின்றன என சொல்பவர்கள் வரலாற்றைப் படித்துவிட்டு வந்து பேசுங்கள்'' என்று கூறினார்.

விஜயின் வாரிசு படத்தில் நடிக்கிறீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது, "வாரிசு படத்தின் ஷூட்டிங் நாங்கள் இருந்த இடத்திற்கு அருகில் நடந்தது. அதனால் அங்கு சென்றேன். அப்போது எடுத்த புகைப்படங்கள் தான் வெளியே வந்தது. மற்றபடி வாரிசு படத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை" என்றார்.

அப்போது, 'பொன்னியின் செல்வன்' படத்தால் தான் 'காஃபி வித் காதல்' படம் தாமதமாகிறதா என்ற கேள்விக்கு "காஃபி வித் காதல் படம் ஒரு ஃபீல் குட் படமாக, குடும்பங்கள் ரசிக்கும்படியும் உருவாகியிருக்கிறது.

படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. எனவே, படத்தை அடுத்த மாதம் வெளியிட இருக்கிறோம். மற்றபடி பொன்னியின் செல்வனுக்கும், காஃபி வித் காதல் படத்தின் தாமதத்திற்கும் சம்பந்தம் இல்லை" என்றார்.

இதையும் படிங்க: பூஸான் சர்வதேச திரைப்பட விழாவில் ‘விக்ரம்’ திரைப்படம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.