ETV Bharat / entertainment

தனது குரு விக்ரமனின் மகனை நாயகனாக்கும் கே.எஸ்.ரவிக்குமார்...! - கே எஸ் ரவிகுமார்

இயக்குநர் விக்ரமனின் மகன் நடிகர் விஜய் கனிஷ்கா நடிகராக அறிமுகமாகும் ‘ஹிட் லிஸ்ட்’ படத்தின் பூஜை இன்று(செப்.1) சென்னையில் நடந்தேறியது.

தனது குரு விக்ரமனின் மகனை நாயகனாக்கும் கே.எஸ்.ரவிக்குமார்...!

author img

By

Published : Sep 1, 2022, 3:13 PM IST

கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகும் 'ஹிட் லிஸ்ட்' படத்தின் பூஜை இன்று(செப்.1) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளர் ஆர்பி‌.சௌத்ரி, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

இப்படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமாரின் உதவியாளர்கள் கார்த்திகேயன் மற்றும் சூர்யகதிர் இருவரும் இயக்குகின்றனர். இந்த விழாவில் பேசிய இயக்குநர் விக்ரமன், “எனது முதல் படம் 'புது வசந்தம்' பூஜையின்போது அவ்வளவு படபடப்பு இல்லை. இப்போது எனது மகன் நடிக்கும் படம் என்பதால் மிகவும் படபடப்பாக உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பே என் மகன் நாயகனாக நடிக்க வேண்டியது. ஆனால், அப்போது அது முடியவில்லை. ரவிக்குமாருக்கு நன்றி. தமிழ் சினிமாவில் அதிக இயக்குநர்களை அறிமுகப்படுத்தியது ஆர்.பி‌.சௌத்ரிதான். இப்படம் நிச்சயம் வெற்றிபெறும்'' எனப் பேசினார்.

அறிமுக நடிகர் விஜய் கனிஷ்கா பேசுகையில், ''இது மிகவும் மகிழ்ச்சியான நாள். இது எனக்கு நன்றி சொல்லும் மேடை. எனது வெற்றிக்காக இந்த இரண்டு இயக்குநர்களும் உழைக்கின்றனர். சக மனிதரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அப்பா எனக்கு சொல்லிக்கொடுத்துள்ளார். கலைராணி அவர்களுக்கு நன்றி. ரவிக்குமாருக்கு நான் மிகப்பெரிய ரசிகன். ரொம்ப நன்றி. நீங்கள் இல்லாமல் நான் இல்லை'' என்றார்.

விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ''ஒரு படம் வெற்றியடைய நிறைய காரணம் இருக்கும். முதல் காரணம் விக்ரமன் தான். காதலை இப்படி எல்லாம் சொல்லலாம் என அறிமுகம் செய்தது விக்ரமன். இப்போது 'தளபதி' என்று சொல்லக் கூடிய விஜயின் ’பூவே உனக்காக’ படத்தை மறக்க முடியாது. திரை உலகில் பல வாரிசுகள் வெற்றி பெற்று வருகிறார்கள். பெற்றோர்களை பெருமையடைய செய்கிறார்கள்.

நான் விஜய் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டபோது, அவரை தினமும் கடற்கரை அழைத்துச்செல்வேன். ஜாகுவார் தங்கம் மாஸ்டர் பயிற்சி கொடுப்பார். அப்படி நடிக்க வரும்முன் பயிற்சி எடுத்துக்கொண்டு, இந்தப் படத்தின் ஹீரோ வந்துள்ளது மகிழ்ச்சி” என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், “தமிழ்நாட்டில் தமிழர்களை ஹீரோவாக, இயக்குநர்களாக போடுங்கள். பற்றாக்குறை இருக்கும்போது மற்றும் மற்றவர்களைப் பயன்படுத்துங்கள். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பாளர்கள் வாழ வேண்டும் என நினைப்பவர். அதேபோல தான் விக்ரமனும் தயாரிப்பாளர் வாழ வேண்டும் என நினைக்கக்கூடியவர்.

அவரது குடும்ப வாரிசு நன்றாக வரவேண்டும். தயாரிப்பாளர்களைக் காப்பாற்றுங்கள். அவர்களிடம் வம்பு பண்ண வேண்டாம். தயாரிப்பாளர்கள் அசல் வந்தால் கூட படம் எடுப்பார்கள், பணத்தை ஒதுக்கமாட்டார்கள்'' என்றார்.

இதையும் படிங்க: நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் குக் வித் கோமாளி புகழ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.