ETV Bharat / entertainment

"எனது புகைப்படங்கள் மார்ஃபிங் செய்யப்பட்டுள்ளன" - நிர்வாண படங்கள் குறித்து நடிகர் ரன்வீர் சிங் விளக்கம்! - போட்டோ சூட்டின்போது உள்ளாடை அணிந்திருந்தேன்

தனது புகைப்படங்கள் ஆபாசமாக மார்ஃபிங் செய்யப்பட்டுள்ளதாக நடிகர் ரன்வீர் சிங் போலீஸில் விளக்கமளித்துள்ளார்.

nude
nude
author img

By

Published : Sep 15, 2022, 9:39 PM IST

மும்பை: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் அண்மையில் நிர்வாண போட்டோ சூட் நடத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான பெண்ணியவாத அமைப்பினர் போலீஸில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், விசாரணைக்கு ஆஜராகும்படி ரன்வீர் சிங்கிற்கு நோட்டீஸ் வழங்கினர். அதன்படி, கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி, ரன்வீர் சிங் போலீசாரிடம் நேரில் விளக்கமளித்தார். இந்த விளக்கம் தொடர்பான தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன.

அதன்படி, அந்தரங்க உறுப்பு தெரியும்படியான புகைப்படங்களை தான் சமூக வலைதளங்களில் பகிரவில்லை என்று தெரிவித்துள்ளார். போட்டோ சூட்டின்போது தான் உள்ளாடை அணிந்திருந்ததாகவும், இணையத்தில் பகிரப்பட்டுள்ள தனது அந்தரங்க புகைப்படங்கள் மார்ஃபிங் செய்யப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் மார்ஃபிங் செய்யப்பட்டவையா? என்பதை கண்டறிய படங்களை தடயவியல் துறைக்கு அனுப்பி வைத்துள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நிர்வாண போட்டோ சூட் : காவல்நிலையத்தில் விளக்கமளித்த ரன்வீர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.