சென்னை: தியாகராயர் நகரில் உள்ள பிரபல தங்கை நகை கடையில் அட்சய திருதியை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சியில் நடிகை சுஹாசினி பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சுஹாசினி, "நடிகர்களுக்கு அனைத்து மொழிகளும் தெரிந்தே ஆக வேண்டும். அனைத்து மொழிகளையும் மதித்தே ஆக வேண்டும். எல்லோரும் அனைத்து மொழிகளையும் சமமாக கருத வேண்டும்.
இந்தி நல்ல மொழி. அதனைக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள். அவர்களுடன் நாம் பேச வேண்டும் என்றால் அந்த மொழியை கற்று கொள்ள வேண்டும். தமிழர்களும் நல்லவர்கள். அவர்களுடன் தமிழில் பேசினால் மகிழ்ச்சி அடைவார்கள். இதைப் பற்றி என்ன கூறுவது என்று தெரியவில்லை. ஆனால் நானும் தமிழ் பெண்தான்" என்று கூறினார்.
இதையும் படிங்க KGF: அஜய் தேவ்கன் இந்தி மார்க்கெட் காலி.. அடித்து ஆடும் கேஜிஎஃப்2!