ETV Bharat / entertainment

நம்மோடு என்றும் இசையாய் இணைந்திருக்கும் யுவன்...#HBD யுவன்ஷங்கர் ராஜா - YUVAN age

இசையால் சந்தோஷம், சோகம், கொண்டாட்டம் என நமது வாழ்வின் பெறும்பாலான முக்கிய தருணங்களில் நம்மோடு இணைந்திருக்கும் யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்த்நாள் சிறப்பு தொகுப்பை காணலாம்.

நம்மோடு என்றும் இசையாய் இணைந்திருக்கும்  யுவன்...#HBD யுவன்ஷங்கர் ராஜா

author img

By

Published : Aug 31, 2022, 4:11 PM IST

சிலரைப்பற்றி எப்போது வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். அவர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. இசையில் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் எனப் பலர் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தனக்கென ஒரு தனி பாதை வகுத்து, அதில் வெற்றி கண்ட யுவன் இன்று தனது 43ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

90ஸ் கிட்ஸ், 2K கிட்ஸ் என யாரிடமும் சென்று உங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர் யார் என்று கேட்டால் அதில் யுவன் ஷங்கர் ராஜா முதல் மூன்று இடங்களுக்குள் இருப்பார். பல இயக்குநர்களும் யுவன் ஒரு படத்தின் இசையை படத்தின் கதைக்கேற்ப, அந்த உணர்ச்சிகளை புரிந்து ஒரு கதாசிரியரின் பார்வையிலிருந்து இசையமைக்கும் வல்லவர் எனப் பாராட்டியுள்ளனர்.

#HBD யுவன்ஷங்கர் ராஜா
#HBD யுவன்ஷங்கர் ராஜா

இசைக்குத் தரம் முக்கியம்தான். அதேசமயம் அந்த இசைக்கு ஈரமும் முக்கியம். தமிழர்களை படுத்திக்கொண்டிருந்த இசையை எம்.எஸ்.வி. அழகுபடுத்தினார், இளையராஜா எளிமைப்படுத்தினார், ஏ.ஆர். ரஹ்மான் அடையாளப்படுத்தினார், யுவன் ஈரப்படுத்தினார். ஆம், யுவனின் இசையும், குரலும் ஈரத்தால் நிறைந்தவை.

ஒரு பாடலை பெரும்பாலான இசையமைப்பாளர்கள் ஏதேனும் ஒரு கருவியை வைத்து ஆரம்பித்திருந்த சமயத்தில் யுவனோ ப்ரீ லூடில்(Prelude) தன் குரலை வைத்து ஆரம்பித்தார். அன்றிலிருந்து அவரது குரலுக்கெனவும் பலரின் காதுகள் காத்திருக்க ஆரம்பித்தன. அதுமட்டுமின்றி, இப்போதெல்லாம் ஒரு படத்திற்கு ஆல்பம் ஹிட் கொடுத்துவிட்டாலே, பலரின் கால்கள் தரையில் நிற்பதில்லை, காதுகள் பிறரின் குரலைக் கேட்பதில்லை.

#HBD யுவன்ஷங்கர் ராஜா
#HBD யுவன்ஷங்கர் ராஜா

ஆனால், 2000த்தின் தொடக்கத்திலிருந்து ஏறத்தாழ 12 வருடங்கள் யுவன் இசையமைத்த பெரும்பாலான திரைப்படங்களின் ஆல்பம் ஹிட். இருப்பினும் அவர் எந்த மேடையிலும் தம்பட்டமோ, துள்ளலோ செய்ததில்லை. அதுமட்டுமின்றி கம்யூனிசம், பெரியாரிசம் என்று சித்தாந்தத்தை குறிப்பதுபோல் யுவனிசம் என்ற ஒரு சொல் முதன்முதலாக உருவானது, இவருக்கு மட்டும்தான். அந்த அளவுக்கு அவர் மீது அவரது ரசிகர்கள் வெறிபிடித்திருக்கிறார்கள்.

யுவன் இந்த 25 ஆண்டுகளில் இசையமைக்காத ஜானர் இல்லை. சின்ன பட்ஜெட் படமோ, பெரிய பட்ஜெட் படமோ எனக்கும், என் இசைக்கும் பட்ஜெட் பாகுபாடு கிடையாது என்று இருப்பது அவரிடம் மதிக்கப்பட வேண்டிய குணம். அவரை எந்த வட்டத்திற்குள்ளும் அடக்க முடியாது. அவரால் செல்வராகவனுக்கு ஆகச்சிறந்த மெலடியை இசைக்க முடியும், ராமுக்கு பேரன்பை கொடுக்க முடியும், அமீருக்கு பருத்தி வீரனை அறிமுகம் செய்ய முடியும்.

#HBD யுவன்ஷங்கர் ராஜா
#HBD யுவன்ஷங்கர் ராஜா

அதேபோல், படங்களில் பின்னணி இசை மற்றும் பிஜிஎம்-களுக்கு என ரசிகர்கள் மத்தியில் முதன்முதலில் தனி கவனத்தை ஈர்க்கச்செய்தவர் யுவன் தான். குறிப்பாக யுவன் - செல்வராகவன் கூட்டணியில் வெளியான ’7ஜி ரெயின்போ காலனி’ படத்தின் இசை மட்டுமின்றி படத்தின் பின்னணி இசை, அப்போதைய காலகட்டத்தில் தனி கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கவிஞர்களின் கற்பனைக் குதிரையை அவிழ்த்துவிட யாராலும் முடியும். ஆனால், அவர்களின் கற்பனைக் குதிரைக்கு கடிவாளம் போடுவதற்குத்தனித்திறமை வேண்டும். இதுவரை யுவனுடன் பணியாற்றிய எந்த கவிஞரும் எல்லை மீறிய கற்பனையை இசைக்குள் கொட்டியதில்லை.

தானும், தன் இசையும் எப்படி எளிமையோ அதேபோல்தான் வரிகளும் எளிமையாக இருக்க வேண்டுமென்பதில் இன்றுவரை மிகவும் கவனமாக இருக்கிறார், யுவன். அதனால்தான் அவரும் அவரது இசையும் அதில் இடம்பெறும் வரிகளும் எளிமையாக இருக்கின்றன.

#HBD யுவன்ஷங்கர் ராஜா
#HBD யுவன்ஷங்கர் ராஜா

காலத்தால் அழிக்க முடியாத பாடலை ரீ மிக்ஸ் செய்யும்போது, அந்தப் பாடலுக்கு குறைந்தபட்ச மரியாதையாவது கொடுக்க வேண்டும். அதை இங்கு சிலர் செய்யத்தவறியிருந்தாலும் யுவன் செய்தார். சில காலம் தனது சொந்தப் பிரச்னைகளால் இசையமைப்பதிலிருந்து யுவன் விலகியிருக்க பல இசையமைப்பாளர்கள் வந்து தங்களுக்கென ஒரு இடத்தைப் பிடித்தனர். ஆனால், யுவனின் இடத்தை யாராலும் நெருங்க முடியவில்லை.

இதுவரை யுவனுக்கு ஏன் தேசிய விருது கொடுக்கப்படவில்லை என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பலரிடம் இருக்கிறது. ஆனால், விருதை கண்டுகொள்ளாமல் என் வேலை ரசிகர்களின் ருசிக்கு இசை அமைப்பதே என்று அமைதியாக இருக்கிறார். அந்த அமைதியும், நிதானமும்தான் எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் அவரை நெருங்க முடியாத இடத்தில் வைத்திருக்கின்றன.

#HBD யுவன்ஷங்கர் ராஜா
#HBD யுவன்ஷங்கர் ராஜா

அப்படிப் பார்க்கையில், தற்கால இசையின் ‘இளைய’ ராஜா தான்தான் என எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி நிரூபித்துவிட்டு அமைதியாக இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: பிரமாண்டமாக நடைபெறவுள்ள 'பொன்னியின் செல்வன்' ஆடியோ வெளியீட்டு விழா... தேதி தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.