நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் 1995ஆம் ஆண்டு அசுரன் திரைப்படத்தில் வெளியான ”சக்கு சக்கு வத்திக்குச்சி” என்னும் பாடல் இடம்பெற்றுள்ளது. தற்பொழுது இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சூழலில் இந்தப் பாடல் வைரல் ஆவது குறித்து ஹாரிஸ் ஜெயராஜ் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அதில்,
-
I am glad to see this peppy vintage song going Viral, which was composed by Mr.Adithyan and programmed by me. This song was recorded at VGP studio, in 1995. 😊 Chakku Chakku Vathikuchi | Asuran Movie Video Songs | Roja | Adithyan | ... https://t.co/9IyzFibIo1 via @YouTube
— Harris Jayaraj (@Jharrisjayaraj) June 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I am glad to see this peppy vintage song going Viral, which was composed by Mr.Adithyan and programmed by me. This song was recorded at VGP studio, in 1995. 😊 Chakku Chakku Vathikuchi | Asuran Movie Video Songs | Roja | Adithyan | ... https://t.co/9IyzFibIo1 via @YouTube
— Harris Jayaraj (@Jharrisjayaraj) June 6, 2022I am glad to see this peppy vintage song going Viral, which was composed by Mr.Adithyan and programmed by me. This song was recorded at VGP studio, in 1995. 😊 Chakku Chakku Vathikuchi | Asuran Movie Video Songs | Roja | Adithyan | ... https://t.co/9IyzFibIo1 via @YouTube
— Harris Jayaraj (@Jharrisjayaraj) June 6, 2022
’திரு.ஆதித்தன் இசையமைத்து, நான் ப்ரோக்ராம் செய்த இந்த பெப்பி விண்டேஜ் பாடலான ”சக்கு சக்கு வத்திக்குச்சி” பாடல் வைரலாகி வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பாடல் 1995இல் VGP ஸ்டூடியோவில் பதிவு செய்யப்பட்டது’ எனக் கூறியுள்ளார்
இதையும் படிங்க: மீண்டும் இணைந்த கலகலப்பான கூட்டணி - இயக்குநர் சுந்தர்.சி-யின் படத்தின் டைட்டில் வெளியானது!