தமிழ்சினிமாவின் கடந்த 10 ஆண்டு காலகட்டத்தில் அறிமுகமான 'சாக்லெட் பாய்' ஹீரோக்களில் தனக்கென தனியிடம் பிடித்து நிலைத்து வருபவர் தான், நடிகர் ஹரிஷ் கல்யாண். அடுத்தடுத்து வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து வந்த ஹரிஷ் கல்யாண், தற்போது தசரா பண்டிகையை முன்னிட்டு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்க்கை குறித்த அறிவிப்பினை வெளிவிடும் தொனியில் பதிவு ஒன்றையிட்டுள்ளார்.
ஓர் பெண்ணின் கையைக் கோர்த்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ‘மங்களகரமான தொடக்கங்களை நோக்கி’ எனப் பதிவிட்டுள்ளார். இது அவரது கல்யாணம் குறித்த அறிவிப்பு என அவரது பதிவின்கீழ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இவருக்கு யார் ஜோடி எனப் பலரும் பேசி வரும் நிலையில், சில பேர் அது நடிகை பிரியா பவானி சங்கரின் கை தான் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
-
To new auspicious beginnings ❤️#HappyVijayadashami #HappyDussehra #HappyAyudhaPooja pic.twitter.com/vN2jwNvbjl
— Harish Kalyan (@iamharishkalyan) October 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">To new auspicious beginnings ❤️#HappyVijayadashami #HappyDussehra #HappyAyudhaPooja pic.twitter.com/vN2jwNvbjl
— Harish Kalyan (@iamharishkalyan) October 5, 2022To new auspicious beginnings ❤️#HappyVijayadashami #HappyDussehra #HappyAyudhaPooja pic.twitter.com/vN2jwNvbjl
— Harish Kalyan (@iamharishkalyan) October 5, 2022
ஏனெனில் இவரும் பிரியா பவானி சங்கரும் காதலில் உள்ளதாக ஏற்கெனவே சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப் பட்டு வந்த நிலையில், இதை இன்றும் பேசி வருகின்றனர் ரசிகர்கள். ஆனால், பிரியா பவானி சங்கர் வேறொருவருடன் காதலில் இருப்பதை ஏற்கெனவே வெளிப்படையாக அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'பல ஆண்டுகள் கழித்து ஒரு தரமான வரலாற்றுப்படம்..!' - இயக்குநர் ஷங்கர் புகழாரம்