சென்னை: பிக் பாஸ் சீசன் - 6இன் நேற்றைய எபிசோடில் போட்டியாளர் ஜி.பி.முத்து அவராகவே முன்வந்து வெளியேறினார். பிக் பாஸின் 2ஆவது வாரம் நிறைவடைந்த நிலையில், சனிக்கிழமையான நேற்று(அக்.22) நமது ஆண்டவர் முதலில் வந்து அகம் டிவி வழியே அகத்திற்குள் போய், அஜீம் பிரச்சனையிலிருந்தே தொடங்கினார். போட்டியாளர்கள் அனைவரும் வீட்டிலிருக்கும் ஒருவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என சொன்னதும், அனைவரும் சொல்லி வைத்தது போல் அஜீமிற்கு ரெட் கார்டு கொடுக்க, மனுஷன் கொஞ்சம் உடைந்து தான் போனார்.
இருந்தாலும், திடீரென ஜென்டில் மேன் மாதிரி பேசுறத மட்டும் விடாம, நம்ம ஆண்டவர் கிட்டயே “மன்னிக்கிறவன் மனுஷன், மன்னிப்பு கேக்குறவன் வீரன்...!” அப்படினு விருமாண்டி வசனம் பேசுனதெல்லாம் ரொம்ப நகைப்பாகத் தான் இருந்ததுனு ரசிகர்கள் பேசிகிட்டாங்க. எல்லோரும் தனக்கு ரெட் கார்டு தந்துவிட்டதை உணர்ந்ததும் பக்கம், பக்கமா பேசி மன்னிப்பு கேட்டதும் கொஞ்சம் செயற்கையா தான் தெரிந்ததுனும் பேச்சு அடிப்பட்டது.
அவ்வளவு கலவரத்திலும் விக்ரமன் கண்ணியமா நடந்ததற்கு கமலிடமும் வெகுவாக பாராட்டுகள் கிடைத்தது. அதற்கு பிறகு எபிசோடு முடிவதற்கு முன்னால் ஜி.பி.முத்துவை கன்ஃபசன் ரூமிற்கு அழைத்து பேசினார். அப்போது கமல் ஹாசன் எவ்வளவு சமாதானம் சொல்லியும், தன் மகனை பார்க்க வேண்டுமென ஜி.பி முத்து சொன்னதால் அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதன் மூலம் பிக் பாஸ் சீசன் 6இல் இருந்து வெளியேறும் முதல் போட்டியாளராக ஜி.பி.முத்து வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டின் மிக வலிமையான போட்டியாளராக முதல் வாரமே தெரிந்தவர் ஜி.பி.முத்து. ஒரே வாரத்தில் மக்களிடமும் மிகுந்த ஆதரவைப் பெற்றார். இருப்பினும் தனது மகன் பாசத்திற்காக கிடைக்க விருந்த புகழ், பணம் என அனைத்தையும் தள்ளிவிட்டு போனது நேற்றைய எபிசோடின் நெகிழ்ச்சிமிக்க தருணமாக இருந்தது. அவரது முடிவு நமது தலைவர் ஜி.பி.முத்து ஆர்மியை வேதனைக்குள்ளக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜப்பான் வீதிகளில் காதல் உலா வந்த ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண்