ETV Bharat / entertainment

திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர், நிர்வாகிகள் பதவியேற்பு - chairman k rajan

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற விநியோகஸ்தர் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தேர்தல்; தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு

author img

By

Published : Jun 24, 2022, 12:53 PM IST

Updated : Jun 24, 2022, 5:22 PM IST

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தின் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. தலைவராக கே.ராஜன், செயலாளராக காளையப்பன், பொருளாளராக முரளி, துணைத்தலைவராக நந்தகோபால், இணைச்செயலாளராக சாய் ஆகியோருக்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

செயற்குழு உறுப்பினர்களாக மெட்ரோ ஜெயகுமார், கிருஷ்ணன், சந்திரன், பிரபு ராம்பிரசாத், தியாகு, பன்னீர்செல்வம், மனோகர், சொக்கலிங்கம், ஆனந்தன், சுதாகர், கிருஷ்ணமூர்த்தி, சாகா ரகீம், குரோம்பேட்டை பாபு, ஏ.ஜி.ரகுபதி, கருணாகரன், செல்வம் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.

பதவி ஏற்பு விழாவில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் காட்ரகட்ட பிரசாத், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் துணை தலைவர் ஆர்.கே. சுரேஷ், சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன், வேல்ஸ் பல்கலைகழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ், தயாரிப்பாளர்கள் சிவசக்தி பாண்டியன், கே.டி.குஞ்சுமோன், பிலிம்சேம்பர் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி உட்பட ஏராளமான வினியோகஸ்தர்கள் மற்றும் மீடியேட்டர்ஸ் அசோசியேசனின் நிர்வாகிகள் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினர்.

திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தேர்தல்; தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு
திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தேர்தல்; தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு

ஜூலை மாதம் முதல் நலிவடைந்த வினியோகஸ்தர்கள் 100 பேருக்கு மாதம்தோறும் ரூபாய் 1000 அன்புத்தொகையாக வழங்க இருக்கிறோம். அதற்கு அச்சாரமாக இன்று 5 பேருக்கு வழங்குவதாக அறிவித்து தலைவர் கே.ராஜன் வழங்கினார். மேலும் மாதம்தோறும் இதற்கு ஒரு லட்சம் தேவைப்படுவதாகவும், அதற்கு உதவி செய்யுங்கள் என்று தலைவர் கே.ராஜன் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து ஐசரி கணேஷ் 5 லட்சம் ரூபாய் தருவதாக அறிவித்தார். அவரை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவர் ஆர்.கே.சுரேஷ், வினியோகஸ்தர் சங்க துணைத்தலைவர் நந்தகோபால், பொருளாளர் முரளி, இணைச்செயலாளர் சாய் ஆகியோர் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கினர்.

இதையும் படிங்க: Watch video: வெங்கட் பிரபு இயக்கும் முதல் தெலுங்கு படத்தின் பூஜை..!

Last Updated : Jun 24, 2022, 5:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.