ETV Bharat / entertainment

"தமிழில் பட வாய்ப்புகளே‌‌ இல்லை" - வித்யாசாகர் உருக்கம் - வித்யாசாகர் இசை நிகழ்ச்சி

சென்னையில் பிறந்த நாளை கொண்டாடிய இசையமைப்பாளர் வித்யாசாகர் விரைவில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

இசைஅமைப்பாளர் வித்யாசாகர்
இசைஅமைப்பாளர் வித்யாசாகர்
author img

By

Published : Mar 3, 2023, 12:06 PM IST

சென்னை: மெலோடி பாடல்களின் மூலம் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர் இசை அமைப்பாளர் வித்யாசாகர். ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் எல்லா முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசை அமைத்தவர். இவரது பாடல்களை கேட்காத காதுகளே இல்லை எனலாம். மெலோடி, குத்து‌ என‌ எல்லா‌ வெரைட்டியிலும்‌ கலக்கியவர். கில்லி, சந்திரமுகி போன்ற படங்களில் இவரது இசை இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

இவர் நேற்று‌ (மார்ச்.2) தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதோடு திரைத்துறையிலும் 34 ஆண்டுகளை நிறைவு செய்தார். அதுமட்டுமின்றி முதல்முறையாக இசை நிகழ்ச்சியும் நடத்துகிறார். அதனை ஒட்டி சென்னையில் செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டார். இந்த சந்திப்பிற்கு முன்னதாக கேக் வெட்டி தனது பிறந்த நாளை இசையமைப்பாளர் வித்யாசாகர் கொண்டாடினார்.

பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய இசையமைப்பாளர் வித்யாசாகர், "நான் இத்தனை ஆண்டுகள் இசையமைப்பாளராக இருந்தும் தமிழ்நாட்டில் இதுவரை ஒரு இசை நிகழ்ச்சி கூட நடத்தவில்லை. இந்த இசை நிகழ்ச்சி ரசிகர்களுக்கு இசை விருந்தாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதே நேரத்தில் மலையாளத்திலும் எந்த இசை நிகழ்ச்சி செய்யவில்லை.

தமிழ் மற்றும் மலையாளம் இரண்டு மொழிகளிலும் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்த உள்ளோம். நான், முதலில் இசை நிகழ்ச்சி நடத்துவது ஸ்பெஷல் தான். அதிலும் நீங்கள் பார்க்க வருவது இன்னும் ஸ்பெஷல். இந்த இசை நிகழ்ச்சி எப்போது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. இடம் உறுதி செய்துவிட்ட பின்னர் தேதி அறிவிக்கப்படும். மக்கள் திரண்டு வந்து பார்க்க வேண்டும் என்பதே முக்கியம்.

இப்போது இருக்க கூடிய இசை என்பது பல புதியவர்களுக்கு வரவேற்பு கொடுக்கப்படுகிறது. புதுமையை வரவேற்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக இசை துறையில் பணியாற்றி இருப்பது என்பது மக்களின் பேராதரவும், அன்பு மட்டுமே. இத்தனை ஆண்டுகள் இசை பயணத்தில் நான் கற்றது இன்னும், நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தது தான்.

மெலோடி பாடல் என்பது அந்தந்த காலத்தில் மக்கள் ஏற்றுக் கொள்வதே. கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் மலையாளத்தில் பிஸியாக இருந்தேன். என்னை பொறுத்தவரை எஸ்.பி. பாலசுப்பிரமணியன் என்பவர் ஒரு தேவதூதன். அவருடைய பங்கு என்பது வார்த்தையால் சொல்ல முடியாது.

அவருடைய இழப்பு என்பது பேரிழப்பு. இந்த தருணத்தில் அவர் இருந்து இருந்தால் மகிழ்ச்சி அடைந்து இருப்பார். அவரே வந்து என்னுடைய நிகழ்ச்சியில் பாடி இருப்பார். இந்த இசை நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக ரஜினி, விஜய் இருவரையும் அழைப்பேன். அவர்கள் வருவதும், வராமல் இருப்பதும் அவர்களுடைய விருப்பம்" என்றார்.

இதையும் படிங்க: ஸ்லீவ்லெஸ் உடன் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் மகேஷ்பாபு - குவியும் லைக்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.