ETV Bharat / entertainment

Rashmika Mandanna: ஃபேண்டஸி காதல் கதையில் நடிக்கும் 'எக்ஸ்பிரஷன் குயின்' ராஷ்மிகா! - dream warrior pictures

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஃபேண்டஸி காதல் கதையில் நடிகை ராஷ்மிகா மந்தனா(rashmika mandana) முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 5, 2023, 7:16 AM IST

சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட திரையுலகில் கிரிக் பார்ட்டி என்னும் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன் பின்னர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமான அவருக்கு அப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதன் பின்னர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இளைஞர்கள் மனதை கவர்ந்த ராஷ்மிகா நேஷனல் க்ரஷ், எக்ஸ்பிரஷன் குயின் என்றெல்லாம் அன்போது அழைக்கப்படுகிறார்.

தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் அறிமுகமான ராஷ்மிகா, அதன் பின்னர் இளைய தளபதி விஜயுடன் ஜோடி சேர்ந்து வாரிசு படத்தில் நடித்தார். இந்நிலையில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்(dream warrior pictures) தயாரிக்கும் புதிய படத்தில் கதை நாயகியாக நடிக்கிறார்.

'ரெயின்போ' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை திங்களன்று நடைபெற்றது. இதில் நடிகை ரஷ்மிகா மந்தனா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க, ஃபேண்டஸி கலந்த காதல் திரைப்படமாக உருவாகவுள்ளது. 'ஜோக்கர்', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'அருவி', 'கைதி' உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தொடர்ந்து தங்களின் முத்திரையைப் பதித்து வரும் ட்ரீம் வாரியர் ‘ரெயின்போ’ படத்தை தயாரித்துள்ளது. சாந்தரூபன் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தில் தேவ் மோகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, கே எம் பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். தயாரிப்பு வடிவமைப்பாளாராக தேசிய விருது பெற்ற பங்களான் பொறுப்பேற்றுள்ளார்.

இதுகுறித்து எஸ்ஆர்.பிரபு பேசுகையில், "வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு படைப்பாக 'ரெயின்போ' இருக்கும் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. எங்களின் ஒவ்வொரு திரைப்படத்துக்கும் ஏகோபித்த வரவேற்பையும், வாழ்த்தையும் தந்து வரும் ரசிகர்கள், ரெயின்போவையும் அதே அளவு ரசிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம். படத்தின் அற்புதமான நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இதைச் சாத்தியமாக்குவார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

படத்தின் அறிமுக இயக்குநர் சாந்தரூபன் பேசுகையில், "இதுவரை இந்திய சினிமா பார்த்திராத ஒரு காதல் ஃபேண்டஸி கதையாக 'ரெயின்போ' இருக்கும். ராஷ்மிகாவின் வேறொரு பரிமாண நடிப்பை நீங்கள் திரையில் பார்ப்பீர்கள். புதுமையான கதைக்களம் கண்டிப்பாகப் படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் ஆச்சரியப்படுத்தும்" என்று கூறியுள்ளார்.

நடிகை ரஷ்மிகா பேசுகையில், "ஒரு பெண் கதாபாத்திரத்தின் பார்வையில் சொல்லப்படும் கதையில் முதல் முறையாகப் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்த கதாபாத்திரத்துக்குத் திரையில் உயிர் கொடுக்க ஆவலாக இருக்கிறேன். உங்களை ஆச்சரியப்படுத்தும் ஒரு படமாக ரெயின்போ இருக்கும். அந்தப் பெண் கதாபாத்திரத்துடனான ரசிகர்களின் பயணம் உற்சாகமானதாக இருக்கப் போகிறது. அதற்குத் தயாராகுங்கள்" என்று கூறியுள்ளார்.

'ரெயின்போ' படத்தின் பூஜை நேற்று நடைபெற்ற நிலையில் படப்பிடிப்பு ஏப்ரல் 7ம் தேதி தொடங்குகிறது. இன்று(ஏப்ரல் 5) தனது 27வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் நடிகர் ரன்பீர் கபூர் ஜோடியாக 'அனிமல்' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தோனியின் அதிரடி பேட்டிங்கை நேரில் கண்டு ரசித்த ''தோனி என்டர்டெயின்மென்ட்'' படக்குழு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.