ETV Bharat / entertainment

காசு இல்லனாலும் நல்ல மனசு இருக்கு.. 'நாம் காலண்டர்' வெளியீட்டு விழா ஜெயம் ரவி கலகல! - naam calendar release ceremony 2023

நாம் காலண்டர் வெளியீட்டு விழாவில் ”காலண்டரை பெற்றுக்கொள்ள பணம் இல்லாததால் நான் கோவிலுக்கு போய் வேண்டிக்கொள்கிறேன். என்னிடம் நல்ல மனம் உள்ளது, அதனால் நான் வேண்டுகிறேன்” என ஜெயம் ரவி கூறினார்

”காசு இல்லன்னாலும் என்கிட்ட நல்ல மனசு இருக்கு” - ஜெயம் ரவி

author img

By

Published : Jan 5, 2023, 7:17 AM IST

Updated : Jan 5, 2023, 1:08 PM IST

சென்னை: நடிகை சுஹாசினி மணிரத்னம் நடத்தும் நாம் அறக்கட்டளை சார்பில் வருடந்தோறும் நாம் காலண்டர் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான "நாம் காலண்டர்" வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதன் முதல் பிரதியை மணிரத்னம் வழங்க கல்கியின் பேத்தி கௌரி பெற்றுக் கொண்டார்.

பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் உள்ளடங்கிய இந்த காலண்டர் மூலம் கிடைக்கப் பெறும் பணத்தை நாம் தொண்டு நிறுவனம் மேற்கொள்ளும் பணிகளுக்காக செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட நடிகர்கள் ஜெயம் ரவி, ஜெயராம், ரகுமான் ஆகியோருக்கு "நாம் காலண்டர்" வழங்கப்பட்டது.

இந்த காலண்டரை நடிகர் ஜெயராமிடம் வழங்கியபோது "என்னால் இதை இலவசமாக பெற்றுக்கொள்ள மனதில்லை, ஆகவே இதை என்னிடம் உள்ள இரண்டாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து வாங்கிக் கொள்கிறேன் என்றார். இதன்பின் நடிகர் ரஹ்மானும் தன்னிடம் உள்ள பணத்தை கொடுத்து வாங்கினார். இறுதியில் நடிகர் ஜெயம் ரவி என்னிடம் பணம் இல்லாததால் நான் கோவிலுக்கு போய் வேண்டிக்கொள்கிறேன். என்னிடம் நல்ல மனம் உள்ளது, அதனால் நான் வேண்டுகிறேன்" என்றார்.

இதையும் படிங்க: 'துணிவு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Last Updated : Jan 5, 2023, 1:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.