ETV Bharat / entertainment

சர்வதேச திரைப்பட விழாக்களில் மிளிரும் சூரி.. 'ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படமும் தேர்வு! - seven sea seven hills

Ram's Yezhu Kadal Yezhu Malai: நடிகர் சூரி நடித்து இயக்குநர் ராம் இயக்கியுள்ள 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம், 53வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' தேர்வாகியுள்ளது.

53வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் தேர்வு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2023, 3:37 PM IST

சென்னை: இயக்குநர் ராமின் படைப்புகள் எப்பொழுதும் வித்தியாசமான கதைக்களத்துடனும், தனித்துவமான வாழ்வியலை கொண்டுள்ளதாகவும் இருக்கும். இவர் இயக்கிய கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட ஒவ்வொரு படைப்பும் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இயக்குநர் ராம் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'. நடிகர்கள் நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படம் 53வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' தேர்வாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “படைப்புகள் திரைக்கு வரும் முன்பே அங்கீகாரம் பெறுதல் பெரும் உற்சாகத்தைக் கொடுக்கும். அப்படியொரு மானசீக மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது, இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் 'ஏழு கடல் ஏழு மலை'.

எனது 'வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பான ‘ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம், 53வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' தேர்வாகியிருப்பது மிகுந்த உத்வேகத்தைக் கொடுக்கிறது.

2024 ஜனவரி 25 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெறவுள்ள ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் முக்கிய போட்டிப் பிரிவான பிக் ஸ்க்ரீன் விருதிற்கு பல உலகத் திரைப்படங்களோடு ‘ஏழு கடல் ஏழு மலை’ போட்டியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

இதை சாத்தியமாக்கிய நிவின் பாலி, அஞ்சலி, சூரி மற்றும் இசையில் எப்போதுமே நுணுக்கமாக விளையாடும் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவினை சிறப்பாக கையாண்டிருக்கும் ஏகாம்பரத்திற்கும், படத்திற்கு மிக பக்கபலமாக நின்ற ஆர்ட் டைரக்டர் உமேஷ் குமாருக்கும், ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா மற்றும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் தேர்வுக் குழுவிற்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நல்ல படைப்புகளுக்கு எப்போதும் ஆதரவு அளித்து வரும் ஊடகத்துறை நண்பர்களும், சினிமா ரசிகர்களும் 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படத்திற்கும் உங்களின் ஆதரவையும், ஊக்கத்தையும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆண்டின் இறுதியில் இச்செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

சர்வதேச அளவில் முதல் முறையாக சிறப்புக்குரிய ஒரு விருதிற்கான தேர்வில் எமது நிறுவனத்தின் படைப்பை உலக அரங்கில் கொண்டு நிறுத்தியுள்ள எங்கள் இயக்குநர் ராமிற்கு முதல் நன்றி. நல்லவைகளை எதிர்பார்த்திருக்கும் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பூஜையுடன் தொடங்கிய 'வணங்கான்' படத்தின் டப்பிங்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.