ETV Bharat / entertainment

கெளதமன் இயக்கத்தில் உருவாகும் "மாவீரா"! - ஜீவி பிரகாஷ்குமார்

இயக்குநர் கௌதமன் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் 'மாவீரா' எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.

கெளதமன் இயக்கத்தில் உருவாகும் "மாவீரா"...!

author img

By

Published : Sep 12, 2022, 3:13 PM IST

நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களைத் தமிழுக்கு தந்துள்ள படைப்பாளியான வ.கௌதமன், "கனவே கலையாதே" "மகிழ்ச்சி" திரைப்படங்களுக்குப் பிறகு கதை, திரைக்கதை எழுதி இயக்கும் படத்திற்கு "மாவீரா" என்று பெயரிட்டுள்ளார்.

வி.கே புரொடக்க்ஷன் குழுமம் இத்திரைப்படத்தைத் தயாரிக்கிறது. தமிழர்களின் தொன்மைமிக்க வீரம், அறம், ஈரத்தை சொல்வதோடு பார்க்கும் ஒவ்வொருவரையும் தங்களை திரைப்படத்தோடு தொடர்புபடுத்திக்கொள்ள செய்யும் வகையில் அனைத்து தரப்பினரையும் கவரும் வண்ணம் இத்திரைப்படம் இருக்கும் என இயக்குநர் வ.கெளதமன் உறுதிபடத் தெரிவித்தார்.

"மாவீரா" குறித்து மேலும் தகவல்களைப் பகிர்ந்த அவர், "என் வாழ்நாள் லட்சியமே தமிழர்களின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத சந்தனக்காடு, முந்திரிக்காடு, வன்னிக்காடு பகுதிகளில் வாழ்ந்த மாவீரர்களின் வரலாற்றை இவ்வுலகிற்கு ஒரு தரிசனமாக, சமரசமில்லா படைப்பாக்கித் தருவது மட்டும் தான்.

சந்தனக்காட்டு மாவீரன் வீரப்பனை படைத்துவிட்டேன். முந்திரிக்காடு, வன்னிக்காடு மட்டுமே மீதமுள்ளது. 'அத்து மீறினால் யுத்தம்' என்கிற இலக்கோடு மண்ணையும் மானத்தையும் காத்த ஒரு மாவீரனின் வீரவரலாறே "மாவீரா" திரைப்படம்'' எனக் கூறினார்.

தொடர்ந்து நம்மிடம் பேசிய அவர், "கதை கேட்ட கணத்திலேயே இசைப்பொறுப்பேற்ற ஜி.வி. பிரகாஷ் அவர்களுக்கும்,'உனக்கு மட்டுமல்ல தமிழினத்திற்கே இப்படைப்பு ஒரு தலைநிமிர்வு' என்று வாழ்த்தியதோடு 'புலிக்கொடி எங்கக் கொடி - நாங்க பூமிப்பந்தின் ஆதிக்குடி' எனத் தொடங்கும் பாடலை உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அடித்து ஆடிப்பாடும் பாடலாக எழுதித்தந்து, எனது அனைத்துப் படைப்புகளுக்கும் தோளோடு தோள் நிற்கும் 'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்களுக்கும் நெகிழ்ந்த நன்றிகள்" என்றார்.

இதையும் படிங்க: நடிகையின் தொலைபேசி எண் கேட்டு ஒளிப்பதிவாளருக்கு கொலை மிரட்டல்... இயக்குனரிடம் போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.