சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது தோனி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் மூலம் தமிழ்ப்படம் ஒன்றை தயாரிக்கிறார்.
இதுகுறித்து, அறிவிப்பு இன்று(ஜன.27) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இப்படத்தின் தலைப்பு மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு "Lets get married" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி படத்தை இயக்குகிறார்.
இவர் தோனி தோன்றிய 'அதர்வா தி ஆர்ஜின்' என்ற காமிக்ஸ் நாவலை எழுதியவர். தோனியின் மனைவி சாக்ஷி தோனி இப்படத்தை தயாரிக்கிறார். காதல் ததும்பும் திரைப்படமாக உருவாக உள்ளதாக மோஷன் போஸ்டரை பார்க்கும்போதே தெரிகிறது. இப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:2 நாளில் ரூ.235 கோடி வசூல் சாதனை படைத்த ‘பதான்’