ETV Bharat / entertainment

‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் பட்டியல் வெளியானது; நாளை முதல் இசை

author img

By

Published : Jul 10, 2022, 1:46 PM IST

விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ திரைப்படத்தின் பாடல்கள் பட்டியல் வெளியாகியுள்ளது

‘கோப்ரா’ திரைப்படத்தின் பாடல்கள் பட்டியல் வெளியானது

‘செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ’ லலித் குமார் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே.எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நாளை (ஜூலை 11) மாலை நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று (ஜூலை 10) இப்படத்தின் பாடல்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் ”தும்பி துள்ளல்”, ”உயிர் உருகுதே” ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நாளை வெளியாகவுள்ள பாடல்களும் விக்ரம் ரசிகர்களிடமும், இசை பிரியர்களிடமும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2015ஆம் ஆண்டு வெளியான ‘ஐ’ படத்திற்கு பிறகு கோப்ரா திரைப்படத்தில் விக்ரம் ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: 2 கோடி பார்வையாளர்களை கடந்த பொன்னியின் செல்வன் டீஸர்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.