இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் பல்வேறு கெட்டப்களில் நடித்துள்ள படம் ’கோப்ரா’. இந்தத் திரைப்படம் வரும் 31ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு இந்தப்படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பியுள்ளனர். படத்தைப் பார்த்த குழுவினர் கோப்ரா படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் தணிக்கை முடிந்ததை அறிவித்த படக்குழு என்ன சான்றிதழ் என்பதை சொல்லாமல் இருந்தது.
அதே சமயம் தயாரிப்பு நிறுவனம் யு/ஏ சான்றிதழ் பெற முயற்சித்தது. இருந்தபோதிலும் படத்தில் இடம்பெறும் நாயகனின் கதாபாத்திரத்தை சுட்டிக்காட்டி 'ஏ' சான்றிதழ் மட்டுமே வழங்க முடியும் எனத்தணிக்கை குழு கடிதம் அனுப்பியது. இதனையடுத்து, கௌதமி தலைமையிலான ரிவைஸிங் கமிட்டிக்கு படத்தை அனுப்பி வைத்தனர். அந்தக் குழு தற்போது ’கோப்ரா’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
கூடவே, இப்படத்தின் மொத்த ரன்டைம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் 3 செகண்ட்ஸ் என்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அத்துடன் படத்தில் இருந்து லிப்லாக் முத்தக்காட்சியை வெட்டியும், சில இடங்களில் வரும் கெட்ட வார்த்தைகளை மியூட் செய்தும் சென்சார் போர்டு இறுதி வடிவத்தை உறுதி செய்துள்ளது.
இதையும் படிங்க: த்ரிஷ்யம் 3ஆம் பாகம் எடுப்பது உறுதி... தயாரிப்பாளர் ஆண்டனி