ETV Bharat / entertainment

“நான் படத்தைப் பார்க்கிறேன்”.. சம்பவம் செய்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் - கிளிண்ட் ஈஸ்ட்வுட் ரியாக்‌ஷன்! - tamil cinema news

Clint Eastwood on Jigarthanda Double X: தமிழ் சினிமா ரசிகர் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்க்குமாறு ஹாலிவுட் இயக்குநர் சமூக வலைத்தளத்தில் பரிந்துரை செய்ததற்கு, க்ளிண்ட் ஈஸ்ட்வுட் பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமா ரசிகருக்கு பதிலளித்த க்ளிண்ட் ஈஸ்ட்வுட்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 11:13 AM IST

Updated : Dec 14, 2023, 12:05 PM IST

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியான திரைப்படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. சினிமாவை கருவியாக பயன்படுத்தி காடுகள், விலங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், சினிமா என்ற ஒரு ஊடகம் மனிதனை எந்த அளவு வசீகரிக்கிறது என்பதை கதைக்கருவாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ரவுடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸுக்கு, புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் ரோல் மாடலாக இருப்பார். அல்லியஸ் சீசர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ராகவா லாரன்ஸ், க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டின் ஸ்டைலை பின்பற்றி இருப்பார்.

இவ்வாறு தமிழ் படத்தில் க்ளிண்ட் ஈஸ்ட்வுடை காட்டப்படிருந்தது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஜிகர்தண்டா படத்தை பார்த்து க்ளிண்ட் ஈஸ்ட்வுட் பற்றி தெரியாதவர்கள் கூட அவரை இணையத்தில் தேடினர். தற்போது 93 வயதிலும் ஜுரோர் 2 என படத்தை இயக்கி வரும் க்ளிண்ட் ஈஸ்ட்வுட், The Good the Bad and the Ugly, Unforgiven, Sully உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் க்ளிண்ட் ஈஸ்ட்வுடை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்க்குமாறு தமிழ் சினிமா ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில், க்ளிண்ட் ஈஸ்ட்வுட் அக்கவுண்டை டேக் செய்து பரிந்துரை செய்திருந்தார். அவரது பதிவில், “தமிழ் சினிமாவில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தை உருவாக்கியுள்ளோம்.

நெட்ப்ளிக்ஸ் தளத்தில் உள்ள இந்த படம் உங்களுக்கு சமர்ப்பணமாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் சிறு வயதில் இருப்பது போன்ற காட்சிகளை அனிமேஷனில் உருவாக்கியுள்ளோம். தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது அந்த திரைப்படத்தைப் பாருங்கள்” என பதிவிட்டிருந்தார்.

  • Hi. Clint is aware of this Movie and he states he will get to it upon Completion of his New Film. Juror 2. Thank You. https://t.co/4UpiIOSzdj

    — Clint Eastwood Official (@RealTheClint) December 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அவருக்கு க்ளிண்ட் ஈஸ்ட்வுட் பதில் கூறி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் "நான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் பற்றி அறிந்திருக்கிறேன். எனது ஜுரோர் 2 படத்தை முடித்த பிறகு, அதனை பார்க்கிறேன்" என பதில் கூறியுள்ளார். க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டின் இந்த பதிவு தமிழ் சினிமா ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து க்ளிண்ட் ஈஸ்ட்வுட் பதிவிற்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் எஸ்.ஜே.சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் பதிவில், “உங்களுக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் பற்றி தெரிந்திருப்பதை நம்ப முடியவில்லை. இந்தியாவில் உள்ள க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டின் பல லட்சம் ரசிகர்கள் சார்பாக அர்ப்பணிப்பாக இந்த படத்தை எடுத்தேன். ஜிகர்தண்டா படம் பார்க்க கூறி க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டிடம் பரிந்துரைத்த ரசிகருக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: துபாய் நிகழ்ச்சியில் கொலை மிரட்டல்? - முற்றுபுள்ளி வைத்த பூஜா ஹெக்டே தரப்பு!

Last Updated : Dec 14, 2023, 12:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.