ETV Bharat / entertainment

ஆசியாவில் முதல் முயற்சி “பிகினிங்” ஒரே திரையில் இரண்டு திரைப்படங்கள் - Beginning at film festivals in 40 countries

திருப்பதி பிரதர்ஸ் வெளியிட இருக்கும் ‘பிகினிங்’ திரைப்படம் ஆசியாவிலேயே முதல் முறையாக ஒரே திரையில் இரண்டு படங்களை காணும் வகையில் உருவாகியுள்ளது.

Etv Bharatஆசியாவில் முதல் முயற்சி! “பிகினிங்” ஒரே திரையில் இரண்டு திரைப்படங்கள் - திருப்பதி பிரதர்ஸ் நிறுவன வெளியீடு

author img

By

Published : Dec 18, 2022, 8:08 AM IST

ஒரே திரையில் இரண்டு படங்கள் ஓடக்கூடிய வகையில் உருவாகியுள்ள ‘பிகினிங்’ என்ற இந்த வித்தியாசமான படத்தை இயக்குநர் லிங்குசாமி உலகமெங்கும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். முன்னதாக மஞ்சப்பை, கோலிசோடா, சதுரங்க வேட்டை போன்ற படங்களை வெளியிட்டு வெற்றி பெற்றதன் தொடர்ச்சியாக இந்த பிகினிங் படத்தை வெளியிடுகிறார்.

இப்படமானது ஆசியாவில் முதன் முறையாக இந்த தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட படமாகும். 40 நாடுகளில் நடந்த திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. Lefty Manual Creations தயாரிப்பில், இயக்குநர் ஜெகன் விஜயா இயக்கத்தில், வினோத் கிஷன், கௌரி கிஷன், சச்சின், ரோகிணி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆசியாவில் முதல்முறையாக ‘ஸ்பிலிட் ஸ்கிரீனில்’ இரண்டு கதைகளை காட்டும் டெக்னிக்கில் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் திரையின் இடது பக்கம் ஒரு கதை விவரிக்கப்படும், வலது பக்கம் மற்றொரு கதை நடைபெறும். ஒரே சமயத்தில் இது நடக்கும். அதே நேரத்தில், பார்வையாளர்கள் குழப்பமடைய மாட்டார்கள். ஒரு டிராமா, ஒரு திரில்லர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு நிகழ்வுகளை ஒரே நேரத்தில் பார்ப்பது புது வகையான அனுபவமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ரஜினியை தொடர்ந்து ரீ-ரிலீஸ் ஆகிறது கமலின் விருமாண்டி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.