ETV Bharat / entertainment

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த படம் அயோத்தி, சிறந்த நடிகராக வடிவேலு தேர்வு!

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த நடிகருக்கான விருது வடிவேலுவுக்கும், சிறந்த தமிழ் படத்திற்கான விருது அயோத்தி படத்திற்கும் வழங்கப்பட்டது.

சென்னை சர்வதேச திரைப்பட விழா
சென்னை சர்வதேச திரைப்பட விழா
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 7:29 AM IST

சென்னை: 2003ஆம் ஆண்டில் இருந்து சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில் சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படும். சர்வதேச திரைப்பட விழாவிற்காக 57 நாடுகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட படங்கள் அனுப்பப்பட்டிருந்தன. அதில், இருந்து தேர்வுக் குழு மூலம் சிறந்த 126 படங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டு திரைப்பட விழாவில் 8 ஈரானிய மொழிப் படங்கள், 5 கொரிய மொழிப் படங்கள், பிரெஞ்சு, ஹங்கேரி, மெக்சிகோ நாடுகளில் இருந்து தலா 3 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. மேலும் விடுதலை, மாமன்னன், அயோத்தி உள்ளிட்ட சிறந்த 12 தமிழ் படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டது.

மேலும் உலக சினிமா பிரிவில், பாலகம் (தெலுங்கு), மனஸ் (மலையாளம்) ஆகிய இரண்டு இந்திய படங்களோடு 12 படங்களும், இந்திய பனோரமாவில் 19 படங்களும் திரையிடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு தேர்வாகும் சிறந்த படங்களுக்குச் சிறப்பு விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவில் 9 பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட்டன.

அந்த வகையில் சிறந்த தமிழ் திரைப்படமாக அயோத்தி தேர்வு செய்யப்பட்டு இயக்குநர் ஆர்.மந்திர மூர்த்தி மற்றும் தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன் ஆகியோருக்கு தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாவது சிறந்த தமிழ் திரைப்படமாக உடன்பால் தேர்வு செய்யப்பட்டது இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் மற்றும் தயாரிப்பாளர் கே வெள்ளைதுரைக்கு தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

தமிழ் பிரிவில் தனி நபர் சிறப்பு ஜூரி விருது, விடுதலை படத்தின் இயக்குநர் வெற்றிமாறனுக்கு 50 ஆயிரம் ரூபாயிக்கான காசோலையும் கோப்பையும் வழங்கப்பட்டது. மாமன்னன் படத்திற்காக சிறந்த நடிகர் விருது வடிவேலுவுக்கும், சிறந்த நடிகையாக அயோத்தி படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானிக்கும் வழங்கப்பட்டது.

அதே போல சிறந்த ஒளிப்பதிவாளர் மற்றும் சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது போர்தொழில் படத்திற்காக கலைச்செல்வன் சிவாஜி மற்றும் ஸ்ரீஜித் சாரங் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. சிறந்த படத்தொகுப்பு போர் தோழில் படத்திற்காக ஸ்ரீஜித் சாரங் அவர்களுக்கும், சிறந்த ஒலிப்பதிவாளர் (sound engineer) விருது மாமன்னன் படத்திற்காக சுரேன் ஜி அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

மேல் குறிப்பிட அனைவருக்கும் விருதுக்கான கோப்பை, சான்றிதழ் மற்றும் 50 ஆயிரம் ரூபாயிக்கான காசோலை வழங்கப்பட்டது. செம்பி படத்தின் குழந்தை கலைஞரான நிலா சிறப்புக் குறிப்புச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார். மேலும் சிறந்த குறும்பட விருதாக 'லாஸ்ட் ஹார்ட்' என்ற படம் தேர்வு செய்யப்பட்டு 10 ஆயிரம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது. இதனை மாணவர் பகவத் பெற்றுக்கொண்டார்.

உலக சினிமா போட்டி பிரிவில் சிறந்த திரைப்படமாக ருமேனியா நாட்டை சேர்ந்த, டியூடர் கியுர்கியு இயக்கத்தில் உருவான Freedom(விடுதலை) தேர்வு செய்யப்பட்டது. இரண்டாவது சிறந்த திரைப்படமாக பிரேசில் நாட்டை சேர்ந்த, செர்ஜியோ ரோய்சன்பிளிட் இயக்கத்தில் உருவான Nilding Country (Agreste) என்ற படமும், சிறப்பு நடுவர் விருதாக ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஆலிஸ் க்ரூயா இயக்கிய Act Natural (Seid einfach wie ihr seid) என்ற படம் தேர்வானது.

Footprints On Water படத்தின் இயக்குநர் நதாலியா சியாம் அவர்களுக்கு நடுவர் சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. இயக்குநர் வெற்றிமாறன் மேடையில் பேசுகையில், ”விடுதலை போன்ற ஒரு படத்திற்கு மக்கள் மத்தியிலும், திரைப்பட விருது போன்ற முக்கியமான இடங்களில் பாராட்டப்படுவதும் மேலும் எங்களை ஊக்கப்படுத்துகிறது.

வரும் நாட்களில் கமர்சியல் காட்சிகளை குறைத்து படம் எடுக்க முயற்சிப்பேன். கடந்த சில ஆண்டுகளில் நான் பார்த்த சிறந்த படங்கள் வரிசையில் அயோத்தி படமும் ஒன்று, அவர்களுக்கு எனது பாராட்டுகள். நடிகர் விஜய்யுடன் எப்போது இணைவீர்கள் என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, வருகிறது” என பதிலளித்து சென்றார்.

நடிகர் வடிவேலு விழா மேடையில் பேசுகையில், "மாமன்னன் கதாபாத்திரத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டது தற்போது வரை என்னால் நம்ப முடியவில்லை. இந்த விருது ரசிகர்களாகிய உங்களுக்கும், இயக்குநர் மாரி செல்வராஜுக்கும் தான் சேரும். பிரபு தேவா எவ்வளவோ பாடலுக்கு ஆடியுள்ளார். ஆனால் வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு தான் விருது கிடைத்தது. அதுபோல அழுததற்கு அவார்டு" எனப் பேசினார்.

இதையும் படிங்க: 2023-ம் ஆண்டு தமிழ் சினிமா இழந்த கலைஞர்கள் ஒரு பார்வை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.