ETV Bharat / entertainment

அட்லீ - பிரியா தம்பதிக்கு பிறந்த ஆண் குழந்தை; குவியும் வாழ்த்து! - jawan movie director atlee

இயக்குநர் அட்லீ பிரியா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஆண் குழந்தை
ஆண் குழந்தை
author img

By

Published : Feb 1, 2023, 2:02 PM IST

Updated : Feb 1, 2023, 2:34 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான அட்லீக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தவர் அட்லீ. பின்னர் "ராஜா ராணி" படத்தின் மூலம் இயக்குநராக கால் பதித்தார். அப்படம் வெற்றி பெற்றது.

பின் விஜய்யை வைத்து ’தெறி’, ’மெர்சல்’ , ’பிகில்’ என மூன்று வெற்றிப் படங்களை கொடுத்தார். தற்போது இந்தியில் ஷாரூக்கானை வைத்து ஜவான் படத்தை எடுத்து வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குநர் அட்லீயும் நடிகை பிரியாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

8 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமான பிரியாவுக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய் கலந்து கொண்டு வாழ்த்தினார். இந்த நிலையில் பிரியாவுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அட்லீ தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இருவருக்கும் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நிரந்தர சூப்பர் ஸ்டாரே! ஒழுங்கா போய் வேலையைப் பாரு.. ரசிகருக்கு ரஜினி கூறிய அட்வைஸ்!

Last Updated : Feb 1, 2023, 2:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.