ETV Bharat / entertainment

அருண்விஜய் நடித்துள்ள 'தமிழ் ராக்கர்ஸ்'வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியீடு!

'SonyLIV' ஓடிடி தளத்தின், எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தமிழ் ஒரிஜினல் படைப்பு, “தமிழ் ராக்கர்ஸ்” வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

author img

By

Published : Jul 16, 2022, 10:33 PM IST

அருண்விஜய் நடித்துள்ள தமிழ் ராக்கர்ஸ் டிரெய்லர் வெளியீடு!

’தமிழ் ராக்கர்ஸ்’ தொடர் பைரஸி சைபர் க்ரைம் பின்னால் இருக்கும் இருள் பக்கங்களை காட்சிப்படுத்தும் ஒரு க்ரைம் தொடராகும். பைரஸியுடனான திரைத்துறையின் போரை இந்தத் தொடர் காட்சிப்படுத்தியுள்ளது.

தமிழ் ராக்கர்ஸ், ருத்ரா என்ற காவல்துறை அலுவலரின் கதையைப் பற்றியது. கட்டுக்கடங்காத ரசிகர்கள் கொண்ட நடிகரின், மிகப்பெரும் பட்ஜெட் படம் இணையத் திருடர்களினால் இணையத்தில் வெளியிடப்படுவதை எதிர்த்து ருத்ரா போராடுகிறார். அதன் பின்னணியைக் கண்டுபிடிக்க முயல்கிறார்.

அருண் விஜய் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இந்தத்தொடரில் நடிகை வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி வைத்தியநாதன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அறிவழகன் இயக்கும் இந்தத் தொடரை, மனோஜ் குமார் கலைவாணன் எழுத, புகழ்மிகு ஏவிஎம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இத்தொடர் குறித்து நடிகர் அருண் விஜய் கூறுகையில், "பைரஸி திருட்டானது பொழுதுபோக்குத்துறையில் ஒரு நிலையான போராக இருந்து வருகிறது. டிஜிட்டல் முன்னேற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் வேகமாக வளர்ந்து வரும் உலகில், திருட்டும் புதிய வடிவங்களை எடுத்துள்ளது. இந்தத் தொடர் இந்தப் போரை, அதன் பின்னணியை அற்புதமான விவரங்களோடு சித்தரிக்கிறது.

ருத்ரா போன்ற ஒரு கதாபாத்திரம் கிடைப்பது அரிது. இப்பாத்திரம் எனக்கு கிடைத்து மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தொடரின் மையம் தனித்தன்மை வாய்ந்தது, தற்போதைய சூழ்நிலைக்கு இது மிகவும் பொருத்தமான ஒன்றாகும்.

இயக்குநர் அறிவழகன் மற்றும் ஏவிஎம் புரொடக்சனுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பெரும்பான்மையான மக்களிடம் இத்தொடரை கொண்டு செல்ல SonyLIV மிகப்பெரும் பாலமாக இருக்கும். ரசிகர்களின் கருத்துகளை அறிய ஆவலோடு உள்ளேன்’’ என்றார். SonyLIV தளத்தில் இத்தொடரை 2022, ஆகஸ்ட் 19 முதல் கண்டுகளிக்கலாம்.

இதையும் படிங்க: வரவேற்பை பெற்ற ஜீவாவின் 'மல்லு கேர்ள்‌' பாடல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.