அருள்நிதி நடிப்பில் உருவான 'தேஜாவு' திரைப்படம் ஜூலை 22ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வெளியானது. வைட் கார்பெட் ஃபிலிம்ஸ் சார்பில் விஜய் பாண்டி தயாரிப்பில், பிஜி மீடியா ஒர்க்ஸ் PG முத்தையா இணை தயாரிப்பில் உருவான இப்படத்தினை அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கியிருந்தார். இப்படம் வெளியான முதல் காட்சியில் இருந்தே இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதன் காரணமாக, நேர்மறை கருத்துகளாலும் ஊடகங்களின் விமர்சனங்களாலும் இப்படம் 2 வாரங்களை கடந்து வெற்றிகரமாக 3ஆம் வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. மக்களின் ஆதரவால் இப்படம் மூன்று வாரம் கணிசமான திரையரங்குகளில் வெற்றிகரமாக தொடர்ந்து ஓடி வருவது படக்குழுவினரை உற்சாகமடைய வைத்துள்ளது. மேலும் இப்படம் கேரளாவில் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று (ஆக. 5) வெளியாவது படக்குழுவினரை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
![கேரளாவில் வெளியாகும் அருள்நிதியின் தேஜாவு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-dejavu-kerala-script-7205221_05082022124529_0508f_1659683729_172.jpg)
மது பாலா, சேத்தன், காளி வெங்கட், மைம் கோபி, ஸ்மிருதி வெங்கட், ராகவ் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு PG முத்தையா ஒளிப்பதிவை மேற்கொள்ள, ஜிப்ரான் இசையமைப்பாளராகவும், அருள் சித்தார்த் பட தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
இதையும் படிங்க: பல தடைகளை தாண்டி வெளியானது அதர்வாவின் குருதி ஆட்டம்!