ETV Bharat / entertainment

மீண்டும் இணையும் ‘ஈரம்’ பட கூட்டணி! - sabdham thriller movie

இயக்குநர் அறிவழகன் தனது முதல் படமான ’ஈரம்’ படத்தின் கதாநாயகனான நடிகர் ஆதியுடன் மீண்டும் இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

அறிவழகன் - ஆதி இணையும் சப்தம்
அறிவழகன் - ஆதி இணையும் சப்தம்
author img

By

Published : Dec 15, 2022, 2:32 PM IST

Updated : Dec 15, 2022, 2:45 PM IST

சென்னை: 7G Films சிவாவுடன் இணைந்து Aalpha Frames மூலம் இயக்குநர் அறிவழகன் இயக்கி தயாரிக்கும், “சப்தம்” திரைப்படத்தின் பூஜை நேற்று (டிச.14) நடைபெற்றது. இந்த படத்தில் இயக்குநர் அறிவழகன் தனது முதல் படமான ’ஈரம்’ படத்தின் கதாநாயகனான நடிகர் ஆதியுடன் மீண்டும் இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

ஈரம் திரைப்படம் இன்றும் பெரும்பாலான மக்களுக்கு நினைவில் நிற்கும் படியான படமாக மாறியது. அதனை தொடர்ந்து வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 என தனக்கே உரிய தனித்த திரைக்கதையில் படங்களை இயக்கியுள்ளார். ஈரம் படத்திலிருந்து இந்த படம் முற்றிலும் மாறுபட்ட வகையில், ரசிகர்களை உறைய வைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் பணியாற்றவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: செல்வராகவனின் உதவியாளர் படத்தில் கமிட்டான ஜீவா; போடப்பட்ட பூஜை

Last Updated : Dec 15, 2022, 2:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.