ETV Bharat / entertainment

மறக்குமா நெஞ்சம்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி மாற்று தேதி அறிவிப்பு! - marakuma nenjam

AR Rahman Live Concert in Chennai: சென்னையில் மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு மாற்று தேதி அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஏ.ஆர் ரகுமான் கான்சர்ட் மாற்று தேதி அறிவிப்பு

author img

By

Published : Aug 18, 2023, 2:10 PM IST

சென்னை: தனது தனித்துவமான இசையால் ரசிகர்களை தன்வசம் வைத்திருப்பவர் இசையமைப்பாளர்‌ ஏ.ஆர்.ரஹ்மான். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் தனது இசை ஆளுமையை நிரூபித்தவர். இரண்டு ஆஸ்கர் விருது பெற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர். மேலும், பல்வேறு நாடுகளில் தனது இசை நிகழ்ச்சிகள் மூலம் இசை ரசிகர்களை மகிழ்வித்து வருபவர்.

தற்போது இசை அமைப்பாளர்கள் எல்லோரும் தனியாக ஊர், ஊராகச் சென்று இசை நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மானும் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இவரது “மறக்குமா நெஞ்சம்” என்ற இசை நிகழ்ச்சி கடந்த 12ஆம் சென்னையில் நடைபெற இருந்தது. இதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும் ரசிகர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தனர்.

ஆனால், சென்னையில் பெய்த மழை காரணமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மழை நீர் தேங்கியது. இதனால் நிகழ்ச்சியானது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் நெருக்கமான நண்பர்களுக்கு, மோசமான வானிலை மற்றும் தொடர் மழை காரணமாக இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

என் அன்பிற்குரிய ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில், தற்போது இசை நிகழ்ச்சி நடைபெறும் மாற்று தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அடுத்த மாதம், அதாவது செப்டம்பர் 10ஆம் தேதி இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், “இதுவரை அன்பாகவும் பொறுமையாவும் எங்களுடன் இருந்ததற்கு நன்றி இசை நிகழ்ச்சியின் புதிய தேதி செப்டம்பர் 10. ஏற்கனவே வாங்கிய டிக்கெட்டுகளை வைத்தே இசை நிகழ்ச்சியைக் காணலாம். மிகவும் சிறப்பு வாய்ந்த மாலைப் பொழுதில் எங்களுடன் இணையுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அன்று கோவையில் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தும் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "எனது முதல் படமும் கடைசி படமும் மிகப்பெரிய வெற்றி" - உதயநிதி ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.