ETV Bharat / entertainment

பல்வேறு விருதுகளைக்குவித்த அந்த நாள் எனும் திரைப்படம் - அந்த நாள்

இயக்குநர் விவி கதிரேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள, அந்த நாள் திரைப்படம் சர்வதேச விழாக்களில் பல்வேறு விருதுகளை வாங்கிக்குவித்து வருகிறது.

பல்வேறு விருதுகளை குவித்த ’அந்த நாள்’
பல்வேறு விருதுகளை குவித்த ’அந்த நாள்’
author img

By

Published : Aug 18, 2022, 4:33 PM IST

க்ரீன் மேஜிக் என்டர்டெயின்மென்ட்டின் ஆர்.ரகுநந்தன் தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழ்த்திரைப்படமான, அந்த நாள் உலகமெங்கும் சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றுள்ளது.

"அந்த நாள்" திரைப்படம், நரபலி மற்றும் Black Magic போன்ற விஷயங்களைக் கருவாக கொண்ட திரைப்படம். அதனால் சென்சார் போர்டு சான்றிதழ் வழங்க மறுத்தது . பின்னர் ரிவிசிங் கமிட்டி வாரியத்தால் வெளியிட அனுமதி பெறப்பட்டது.

இப்படத்தின் இயக்குநர் விவி கதிரேசன் ’EUROPE FILM FESTIVAL’ விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதையும், அறிமுக நடிகர் ஆர்யன் ஷியாம் அவர்கள் ’NEWYORK MOVIE AWARDS ’ , ’AMERICAN GOLDEN INTERNATIONAL FILM FESTIVAL ’ , ’ MEDUSA FILM FESTIVAL ’ ’WORLD FILM CARNIVAL SINGAPORE ’ உள்ளிட்ட 4 சர்வதேச திரைப்பட விழாக்களில் சிறந்த நடிகருக்கான விருதைப்பெற்றுள்ளார் .

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் முயற்சியால் ஈர்க்கப்பட்ட ஆர்யன் ஷ்யாம் அவரது "அந்த நாள்" திரைப்படத்தை பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினார். மேலும் சமீபத்தில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் ஆர்யன் ஷ்யாமை வாழ்த்தி விரைவில் அவருடன் ஒரு படத்தில் பணியாற்றுவது குறித்தும் விவாதித்துள்ளார் .

"அந்த நாள்" படத்தில் ஆர்யன் ஷ்யாம் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் ஆதி பிரசாத் மற்றும் லீமா எஸ் பாபு முன்னணி ஹீரோயின்களாகவும் கிஷோர் ராஜ்குமார் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: ரோலெக்ஸிற்கு வைரக்காப்பு பரிசளித்த விருமன் விநியோகஸ்தர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.