அண்மைகாலமாக தங்களுக்கு பிடித்த நடிகர்களின் திரைப்படங்களின் அப்டேட் கேட்டு வித்தியாசமான முறையில் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் அஜித் நடித்த வலிமை படத்தின் அப்டேட் கேட்டு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் தேர்தல் பிரச்சாரங்கள், வெளிநாடுகளில் பிரச்சாரங்கள் என கலக்கி வந்தனர்.
இந்த நிலையில் வரும் பொங்கல் அன்று நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் ஆகியோர் நடித்த வாரிசு மற்றும் துணிவு படங்கள் வெளியாக உள்ளன. இதனையடுத்து விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் அபிமான நடிகர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் துணிவு படம் பொங்கல் அன்று வெளியாக உள்ளதால், வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த பெரிய கரும்பூர் பகுதியில் உள்ள அஜித் ரசிகர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று அங்கே ஐயப்பனை தரிசனம் செய்வதற்கு முன் துணிவு படம் வெற்றி பெற வேண்டும் என பிளக்ஸ் பேனரை வைத்து வழிபட்டனர்.இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க:Exclusive: 'வாரிசு' ஷூட்டிங் ஸ்பாட்டில் 5 யானைகள் சர்ச்சை.. வனத்துறை அமைச்சரின் பதில் என்ன?