ETV Bharat / entertainment

அஜயன் பாலா எழுதி இயக்கும் “அஜயன் பாலாவின் மைலாஞ்சி” படப்பிடிப்பு பணிகள் நிறைவு! - Ajayan Balavin Mylanji movie wrapped up

Ajayan Balavin Mylanji: பிரபல எழுத்தாளரும், இயக்குநருமான அஜயன் பாலா எழுதி இயக்கும் அஜயன் பாலாவின் மைலாஞ்சி படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததையொட்டி, படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

Ajayan Balavin Mylanji movie wrapped up
அஜயன் பாலாவின் மைலாஞ்சி படப்பிடிப்பு பணிகள் நிறைவு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2023, 12:39 PM IST

சென்னை: பிரபல எழுத்தாளரும், இயக்குநருமான அஜயன் பாலா எழுதி இயக்கும் திரைப்படம், “அஜயன் பாலாவின் மைலாஞ்சி”. இந்த படத்தை அஜய் அர்ஜுன் புரோடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததாக படக்குழு கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.

மலைப் பிரதேசத்தின் பின்னணியில் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை பேசும் காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகி உள்ள “அஜயன் பாலாவின் மைலாஞ்சி” திரைப்படம், காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் வெளியாகிறது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குருப், முனீஷ்காந்த் மற்றும் தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், தொழில்நுட்பக் கலைஞர்களாக செழியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டராக ஶ்ரீகர் பிரசாத் இணைந்துள்ளார்.

இப்படத்தின் தலைப்பு மாற்றம் குறித்து பேசிய இயக்குநர், "திரைப்படத் தலைப்புகளின் உரிமையை முறைப்படுத்துவது மிகவும் அவசியம். இந்த நடைமுறையில் உள்ள சில சிக்கல்கள் காரணமாகவே பத்து வருடங்களுக்கு முன் பதிவு செய்திருந்தும், இதே தலைப்பில் வேறு ஒரு படம் திரைக்கு வந்த காரணத்தால், எங்கள் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

மலைப் பிரதேசத்தை பின்னணியாகக் கொண்டு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசும் அழகான காதல் கதையாக படத்தை இயக்கி உள்ளோம். பெரும்பாலான காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்பட்டன. ஒரே மாதத்தில் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது. இத்திரைப்படம் மிகவும் அழகாகவும், உணர்ச்சிப்பூர்வமான வகையில் உருவாகி உள்ளது.

பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை நாம் உணரத் தொடங்கி உள்ள காலகட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். இந்த கருத்தை வலியுறுத்தும் விதமாக இப்படம் உருவாகி உள்ளது. செழியனின் ஒளிப்பதிவு மிகவும் பேசப்படும்.

படத் தயாரிப்பு ( post production) பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. நல்ல கதையின் மீது பெரும் நம்பிக்கை வைத்து தமிழ் சினிமாவின் தரமான கலைஞர்களைக் கொண்ட கூட்டணி இப்படத்திற்காக பணத்தைக் கருத்தில் கொள்ளாமல் கைகோர்த்துள்ளது. இப்படத்தின் கதையை பெரிதும் விரும்பி பாராட்டு தெரிவித்த இளையராஜா, இதில் இடம் பெறும் நான்கு பாடல்களை தானே எழுதியுள்ளார்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாள்; காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி மலர் தூவி மரியாதை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.