ETV Bharat / entertainment

Actress Trisha : திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா! - tamil cinema news

"keep calm and stop rumouring cheers"... trisha marriage rumours: நடிகை த்ரிஷா பிரபல மலையாள தயாரிப்பாளரை திருமணம் செய்து கொள்ள போவதாக செய்தி பரவிய நிலையில் அதற்கு தனது சமூக வலைதள பக்கம் மூலம் மறுப்பு தெரிவித்துள்ளார்

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 2:26 PM IST

சென்னை: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. வெற்றிகரமாக தனது திரை வாழ்வில் 20 ஆண்டுகளை கடந்துள்ள த்ரிஷா, அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். 40 வயதை கடந்த போதிலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். ஆனாலும் அவ்வப்போது அவரது திருமணம் பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கும். அதற்கு அவர் மறுப்பு விளக்கம் கொடுப்பதே வழக்கமாக இருக்கும்.

த்ரிஷா தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் நடித்துள்ளார். மேலும் தி ரோட் என்ற படத்தில் முதன்மை நாயகியாக நடித்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் 6ஆம் தேதி திரைக்கு வருகிறது. மேலும் தனுஷின் 50வது படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

த்ரிஷா சில ஆண்டுகளுக்கு முன்னர் வருண் என்ற தயாரிப்பாளரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அந்த திருமணம் நிச்சயம் வரை சென்று சில கருத்து வேறுபாடுகள் காரணமாக நின்று போனது. அதன் பிறகு த்ரிஷா திருமணம் பற்றி சிந்திக்காமல் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் மீண்டும் தற்போது நடிகை த்ரிஷா திருமணம் குறித்த தகவல் ஒன்று பரவி வந்தது.‌

நடிகை த்ரிஷா பிரபல மலையாள தயாரிப்பாளரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று தகவல் பரவி வந்தது. இதனை அறிந்த அவரது ரசிகர்கள் குழப்பி போய் இருந்தனர். ஏனென்றால் சமீபத்திய‌ பேட்டிகளில் தனது திருமணம் குறித்த கேள்விகளுக்கு நேரம் வரும் போது சொல்கிறேன் என்பார்.‌ தற்போது அந்த நேரம் வந்துவிட்டதோ என ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

இந்த நிலையில் திருமணம் குறித்து வெளிவரும் தகவல்களுக்கு த்ரிஷா தனது சமூகவலைதள பக்கத்தில் லியோ திரைப்பட போஸ்டர் பாணியில் பதில் அளித்துள்ளார்.‌ அதில் ”dear you know who you are and your team, keep calm and stop rumouring cheers" என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் தனது திருமணம் குறித்து வெளிவந்த செய்திகள் வதந்தி என்று அவரே உறுதி செய்துள்ளார்.

இதையும் படிங்க: Selvaraghavan : பான் இந்தியா படத்தில் செல்வராகவன்! எப்ப ரிலீஸ் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.