ஹைதராபாத்: நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில், தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜு தயாரித்து வரும் இந்தப் படத்தில் கதாநாயகியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துவருகிறார்.
இப்படத்தில் சரத்குமார், ஷாம், யோகிபாபு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். சென்டிமென்ட், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் கொண்ட படமாக 'தளபதி 66' உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜயின் தந்தையாக நடிகர் சரத்குமார் நடிக்க உள்ளார். கடந்த மாதம் பூஜையுடன் தளபதி 66 படப்பிடிப்பு தொடங்கி 3ஆம் கட்டமாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கறுப்பு டீ ஷர்ட்டில், கண்ணாடி போட்டுக்கொண்டு, ஸ்மார்ட் லுக்கில் காருக்குள் அமர்ந்திருக்கும் தளபதி விஜயின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிது. இந்தப் புகைப்படம் வெளியான சிறிது நேரத்தில் இணையத்தில் தளபதியின் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'விஜய் போல் நடந்துகொள்ளுங்கள் அஜித்..!' - ஆர்.கே.செல்வமணி ஆலோசனை