ETV Bharat / entertainment

தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரமுக்கு காயம்! - தங்கலான் படப்பிடிப்பு ஒத்திகையில் சம்பவம்

தங்கலான் படப்பிடிப்பு ஒத்திகையின்போது நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் ஒரு மாதம் ஓய்வு எடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

vikram
தங்கலான்
author img

By

Published : May 3, 2023, 4:04 PM IST

சென்னை: நடிகர் விக்ரம், மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் பொன்னியின் செல்வன்-2 திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்திருந்தார். இதில் விக்ரமின் நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தைத் தொடர்ந்து, விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விக்ரமின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தங்கலான் படம் கேஜிஎப் பகுதியில் வாழ்ந்த தமிழர்களின் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. இதற்காக விக்ரம் கடுமையான உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். பொன்னியின் செல்வன்-2 திரைப்படத்தின் புரொமோஷனுக்காக தங்கலான் படத்திற்கு ஓய்வு கொடுத்திருந்த விக்ரம், படம் வெளியாகி விட்டதால் மீண்டும் தங்கலான் படப்பிடிப்பில் இணைந்தார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நேற்று(மே.2) தங்கலான் படப்பிடிப்பு ஒத்திகையின் போது நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவரை அணுகிய நிலையில், ஒரு மாதம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதன் காரணமாக தற்போது தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் கலந்து கொள்ளவில்லை. ஒரு மாத கால ஓய்வுக்கு பிறகு மீண்டும் தங்கலான் படப்பிடிப்பில் விக்ரம் இணைவார் என்று தெரிகிறது. படப்பிடிப்பில் விக்ரம் காயம் அடைந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைந்து நலம் பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆர்யா - கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் Mr.X!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.