தமிழில் கார்த்தியை வைத்து 'தோழா' படத்தை இயக்கியவர், வம்சி பைடிபள்ளி. தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த 'மகரிஷி' திரைப்படம் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது. இதனைத்தொடர்ந்து வம்சி, விஜய்யை வைத்து 'தளபதி 66' படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிறது. விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற 13ஆம் தேதி வெளியாகிறது. இதனைத்தொடர்ந்து வம்சி படத்தில் இன்னும் சில தினங்களில் இணையவுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளதாக படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர். ராஷ்மிகாவின் பிறந்தநாளான இன்று(ஏப்.5) இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: மிஸ்டர் லோக்கலும் நீதிமன்ற வழக்கும்! - இது சிவகார்த்திகேயனின் 'மான் கராத்தே'