ETV Bharat / entertainment

விஜய் சேதுபதி நடத்திய முதல் "சுயமரியாதை திருமணம்"! - Vijay Sethupathi Fan Club Secretary Wedding

சென்னையில் நடிகர் விஜய் சேதுபதி தலைமையில் முதல் சுயமரியாதை திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

விஜய்சேதுபதி நடத்திய முதல் "சுயமரியாதை திருமணம்"!

author img

By

Published : Feb 3, 2023, 8:20 PM IST

விஜய் சேதுபதி நடத்திய முதல்
விஜய் சேதுபதி நடத்திய முதல் "சுயமரியாதை திருமணம்"!

சென்னை: தமிழ்நாட்டு மக்களால் அன்போடு மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி, தனது ரசிகர் மன்றத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வரும் J.குமரனுக்கு சாதி, மதம் கடந்து சுயமரியாதை திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த திருமணம் நடிகர் விஜய் சேதுபதி முன்னிலையில் இன்று காலை சென்னையில் நடைபெற்றது.

உலகில் சாதி, மதம் கடந்து மனிதர்களை நேசிப்போம்; அன்பை பரப்புவோம்; இதை ரசிகர்களிடத்தில் பரப்பி, அன்புக்கு வடிவமாக அனைவராலும் விரும்பப்படும் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்மன்றத்தின் பொதுச்செயலாளர் J.குமரன், சாதி, மதம் கடந்த சடங்குகளற்ற முறையில் அன்பால் இணையும் விதமாக சுயமரியாதை திருமணம் புரிந்துள்ளார்.

விஜய் சேதுபதி மணமக்களை வாழ்த்தி ஆசிர்வதித்தார்

தற்போது விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வரும் இவர் சுயமரியாதை திருமண முறையில் திருமணம் செய்துள்ளது அனைவரிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த திருமணம், இரு வீட்டார் சம்மதத்துடன் சுற்றம் சூழ, நண்பர்கள் கலந்து கொள்ள வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது. இந்த சுயமரியாதை திருமணத்தை நடிகர் விஜய் சேதுபதியும், அவரது துணைவியார் ஜெஸ்ஸியும் முன்னின்று நடத்தி மணமக்களை ஆசிர்வதித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஓபிஎஸ் தயாராக இருந்த போதிலும் ஈபிஎஸ் இணைய மறுக்கிறார்: டிடிவி தினகரன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.