ETV Bharat / entertainment

இளைய தளபதி - தளபதி - தலைவன் - பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய்! - vijay 49th birthday

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவரான விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய்
author img

By

Published : Jun 22, 2023, 11:30 AM IST

சென்னை: நம் நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் தான் ஐந்து முதலமைச்சர்களை திரைத்துறையில் இருந்து பெற்றுள்ளது. அண்ணா தொடங்கி கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, தற்போது முதலமைச்சராக உள்ள ஸ்டாலின் வரை ஏதோ ஒரு விதத்தில் இவர்கள் திரைத்துறையில் பங்காற்றி உள்ளனர். அந்த வரிசையில் இவரும் வருவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்படும் நடிகர் விஜய், இன்று தனது 49ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

தந்தையின் தயவால் சினிமாவில் ஹீரோவானவர் என்று கூறப்பட்டு வந்தாலும் இந்த இடத்தை அடைய அவரது கடின உழைப்பு அளப்பரியது. 'இது எல்லாம் ஒரு மூஞ்சியா' என்றவரின் வாரிசுகள் இதே மூஞ்சியை அவர்களது வாகனத்தில் வீட்டில் ஒட்டி அழகு பார்த்து வருகின்றனர். ஒல்லியான உடல்வாகு என கிண்டல் செய்யப்பட்டவர் அதே ஒல்லியான உடலை வைத்து தான் அற்புதமாக நடனம் ஆடினார். ஆக்ஷனில் தனித்துவம் காட்டினார்.

ஆரம்பத்தில் காதல் படங்களாக நடித்து வந்தவர் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை என அற்புதமான படங்களில் நடித்து குடும்பங்களில் ஒருவராக மாறினார். அதனைத்தொடர்ந்து ப்ரியமுடன் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் புதுமையான நடிப்பை வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து சில பல தோல்விகளுக்குப் பிறகு, 2000ஆம் ஆண்டு தொடக்கத்தில் ரமணா இயக்கத்தில் நடித்த திருமலை படம் தான் விஜய்யின் திரை வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது.

அதுவரையில் சாந்தமான நடிகராக இருந்த விஜய் ஆக்ஷன் அதிரடி கதாபத்திரத்தில் அதகளம் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து விஜய்யை தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மாற்றியது, திருமலை திரைப்படம். அதனைத் தொடர்ந்து போக்கிரி, திருப்பாச்சி, கில்லி, சிவகாசி என மெகா ஹிட் படங்களைக் கொடுத்தார். பிறகு ஆதி, சுறா போன்ற படங்களில் சறுக்கல்களை சந்தித்தாலும் துப்பாக்கி என்ற மெகா ஹிட் படம் மூலம் மீண்டு வந்தார்.

ஒரே மாதிரியான ஆக்‌ஷன் கதாபாத்திரங்களில் விஜய் நடிக்கிறார் என்ற விஜய் மீது ஏற்பட்ட களங்கத்தை தகர்க்கும் வகையில், கத்தி படத்தில் இரட்டை வேடங்களில் நடித்தார். பின்னர் தெறி, மெர்சல் போன்ற வெற்றி படங்களில் விஜய் நடித்தாலும் மாஸ்டர் படத்தில் விஜய் நடித்த ஜேடி (JD) கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

கடந்த ஜூன் 17ஆம் தேதி நடிகர் விஜய் கொடுத்த கல்வி விருதுகள் இரண்டு வாரமாக இணையத்தின் பேசுபொருளாக மாறியிருக்கிறது. எந்தவொரு பணியாளர்களும் இல்லாமல் 13 மணி நேரம் அந்த விழாவில் நின்று அத்தனை பேருக்கும் விருது வழங்கினார். விஜய்யின் அரசியல் விஜயத்திற்கான முன்னோட்டம் இது என்பது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்திருந்தது. விஜய்யின் அரசியல் அடித்தளம் இப்போது அல்ல எப்போதே தொடங்கியது தான். 2008லிருந்து விஜய்க்கும் அரசியலுக்குமான ஆட்டம் தொடங்கியது.

விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சியின் திட்டமும் ஆரம்பத்தில் இருந்தே அதுவாகத்தான் இருந்தது. அதன் முதல்படி தான் 2008ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி தனது 35வது பிறந்தநாளை கொண்டாடிய விஜய், அன்றைய தினம் தனது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றி, அதற்கென ஒரு கொடியையும் அறிவித்தார். சென்னை பல்கலைக்கழக மண்டபத்தில் 'உழைத்திடு... உயர்ந்திடு... உன்னால் முடியும்' என்கிற ஸ்லோகனோடு தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் ஒரு வீடியோவும் வெளியிடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அதே ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக விஜய் உண்ணாவிரதமும் இருந்தார். இதில் இருந்து தான் விஜய்யின் மீது அரசியல்வாதிகளின் பார்வை விழத் தொடங்கியது எனலாம். சென்னையில் சுமார் ஆயிரக்கணக்கான ரசிகர்களோடு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விஜய், 'சினிமாவைத் தாண்டி இப்படி உணர்வுள்ள ரசிகர்கள் எனக்குக் கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது’ என்றெல்லாம் பேசினார்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு தான் விஜய் நற்பணி மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றித் தமிழகம் முழுவதும் சேலம், ஈரோடு என பல மாவட்டங்களுக்கு சென்று இயக்கத்தின் நிகழ்வுகளில் கலந்துகொண்டார், விஜய். 2011ஆம் ஆண்டு விஜய்யின் 'காவலன்' படத்தின் வெளியீட்டின் போது சிக்கல்களை ஏற்படுத்தி, படத்தின் ரிலீஸை தாமதப்படுத்தியதாக செய்திகள் வந்தன. இந்த சமயத்தில் விஜய் அதிமுகவிற்கு ஆதரவானார். ’2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு அணிலாக இருப்பேன்’ என்று கூறினார்.

அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றபிறகு விஜய் நடித்த 'வேலாயுதம்' படத்தில், 'நான் ஆளும்கட்சி' என்றும் வசனம் பேசியிருப்பார். இதன் மூலம் அதிமுகவில் நல்ல உறவில் இருந்த விஜய்க்கு ’தலைவா’ படம் மூலம் புதிய தலை வலி உண்டானது. 2013ஆம் ஆண்டு உருவான அப்படத்தில் `Time to Lead' என வாசகம் இருந்தது. படத்தின் டிரெய்லரில் இருந்த வசனங்கள் என பல விஷயங்கள் அதிமுகவினரை கடுப்பாக்கியது. அதனால் 'தலைவா' படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யவிடாமல் பிரச்னை கிளம்பியது. இதனால் மற்ற மாநிலங்களில் வெளியான படத்தை விஜய் ரசிகர்கள் அங்கு சென்று பார்த்தனர். 12 நாள்களுக்குப் பிறகுதான் தமிழகத்தில் வெளியானது.

இது தொடர்பாக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க விஜய் முயன்றும் முடியவில்லை. பிறகு அதிமுகவை புகழ்ந்து விஜய் ஒரு வீடியோ வெளியிட்டார். இதன் பிறகு அதிமுகவுடன் விரிசல் ஏற்பட்டது. பிறகு 2014ஆம் ஆண்டு கோவை வந்த பிரதமர் மோடியை விஜய் சந்தித்தார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று விஜய் தெரிவித்தார். அதன்பிறகு சற்று அரசியல் நடவடிக்கைகளை குறைத்துக் கொண்டார்.

அதன் பின் மெர்சல் படம் வெளியானபோது, பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. இளைய தளபதியாக இருந்த விஜய் தளபதியாக மாறினார். மத்திய, மாநில அரசுகளில் இருந்து பஞ்சாயத்து வெடித்தது. தளபதி என மாறியது திமுகவையும் படத்தில் ஜிஎஸ்டி குறித்த வசனங்கள் பாஜகவையும் எரிச்சல் அடைய செய்தது. இந்த பிரச்சனையில் ஹெச்.ராஜா 'ஜோசப் விஜய்' என மதரீதியான பிரச்சனையை கிளப்புவது போல் பேசியது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. இதே போல் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் விஜய் அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடந்தது.

தற்போது பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கியது 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துத்தான் விஜய் காய் நகர்த்துகிறார் என்கிறார்கள். அதற்கு ஏற்றார் போல் சமீபத்தில் வந்த 'லியோ' படத்தின் பாடலிலும், 'நான் ரெடிதான் வரவா; அண்ணன் நான் இறங்கி தனியா வரவா; தேள் கொடுக்கு சிங்கத்தை சீண்டாதப்பா; எவன் தடுத்தும் என் ரூட்டு
மாறாதப்பா' என விஜய் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜயின் அரசியல் வருகையை எதிர்பார்க்கிறதா தமிழ்நாடு? - பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.