சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு “எதற்கும் துணிந்தவன்’’ திரைப்படம் வெளியானது. தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். வரலாற்று திரைப்படமாகவும் 3டியிலும் இப்படம் உருவாகி வருகிறது. மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலா இயக்கத்தில் நடிக்க இருந்த “வணங்கான்’’ திரைப்படத்தில் இருந்து சமீபத்தில் சூர்யா விலகினார். வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருந்த “வாடிவாசல்’’ திரைப்படமும் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் சூர்யா இன்று தனது ரசிகர் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பில் ரசிகர் மன்றத்தின் அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து விவாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக நடிகர் விஜய், சென்னையை அடுத்த பனையூரில் தனது மன்ற நிர்வாகிகளை சந்தித்து உரையாடிய நிலையில், அதே பாணியை நடிகர் சூர்யாவும் பின்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:என்னது வாடிவாசலும் ட்ராப்பா? என்ன செய்கிறார் சூர்யா?!