ஐதராபாத் : ஜவான் திரைப்படத்தின் டிரெய்லர் ஜூலை 10ஆம் தேதி வெளியிடப்படும் என நடிகர் ஷாருக்கான் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். விநோதமான உரையாட்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ஷாருக்கான் வெளியிட்டு உள்ள பதிவு 15 நிமிடங்களில் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.
பதான் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ஜவான். இந்த படத்தை அட்லீ இயக்கி உள்ளார். இதன் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அட்லீ அறிமுகமாகி உள்ளார். இதில் முதன் முறையாக ஷாருக்கானுக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகி நயன்தாரா நடித்து உள்ளார்.
மேலும் வில்லனாக விஜய் சேதுபதியும், நகைச்சுவை கதாபாத்திரல் யோகி பாபு மற்றும் பிரபல நட்சத்திர நடிகர், நடிகைகள் பலர் ஜவான் படத்தில் நடித்து உள்ளனர். ஜவான் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். வருகிற செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி ஜவான் திரைப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்து உள்ளது.
இந்த படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி ஜவான் படத்தின் டிஜிட்டல், ஓடிடி, சாட்டிலைட் மற்றும் இசை உரிமை ஆகியவை மட்டும் 250 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இதுதவிர இப்படத்தின் திரையரங்க உரிமைகளும் தற்போது விற்பனை செய்யப்பட்டு உள்ள நிலையில் தமிழக திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. பெரும் தொகை கொடுத்து ஜவான் திரைப்படத்தின் உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியிடு குறித்த அப்டேட்டை நடிகர் ஷாருக்கான் வெளியிட்டு உள்ளார். ஜூலை 10ஆம் தேதி ஜவான் படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளதாக ஷாருக்கான் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். "நான் கருணையா பாவமா?...நானும் நீதான்" என்ற வாசக தொடக்கத்துடன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ஷாருக்கான் படத்தின் அப்டேட்டை பதிவிட்டு உள்ளார்.
ஜூலை 10 ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் ஜவான் படத்தின் டிரெய்லர் வெளியிடப் பட உள்ளதாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். நடிகர் ஷாருக்கான் பதிவு போட்ட 15 நிமிடங்களில் 10 லட்சம் பார்வைகளை கடந்து படத்தின் அப்டேட் வைரலாகி வருகிறது. ஜவான் படத்தின் டிரெய்லரை நடிகர் விஜய் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க : அமெரிக்க அதிபர் பைடன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம்.. இதுதான் காரணமா?