ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை தர்ஷா குப்தாவை நடிகர் சதீஷ் ஆடை கலாசாரம் பற்றி விமர்சித்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில், நடிகர் சதீஷ் அந்த நிகழ்விற்கு வருத்தம் தெரிவித்தும் தான் பேசியது தர்ஷா குப்தா அவர்களின் அனுமதியுடனும் நகைச்சுவைக்காக பேசியதும் என்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் நடிகர் சதீஷ் வெளியிட்ட அந்த வீடியோவிற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் நடிகை தர்ஷா குப்தா பதில் ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது, ‘நடிகர் சதீஷ் இந்த விஷயத்தை என் பக்கம் திருப்பி விடுகின்றார், இது மிகவும் விசித்திரமான ஒன்று.
யாராவது அவர்களைப் பற்றி அவர்களே மேடையிலே அசிங்கமாக பேச சொல்வார்களா?, எனக்கும் நீங்கள் அன்று பேசியது மிகவும் வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால், நான் அதைப் பெரிதாக காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் இப்போது இப்படி மாற்றி சொல்வது சரியல்ல' என்று அவர் பதிவிட்டுள்ளார்.
சாதாரணமாக சதீஷ் பேசியது தற்போது விவாதப்பொருளாக மாறி, ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டும் அளவிற்கு வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"எந்த ஆடை அணிய வேண்டும் என்பது பெண்களின் தனிப்பட்ட உரிமை"...இயக்குனர் நவீன்