துணிவு படம் குறித்து நடிகர் சமுத்திரகனி அளித்த பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்...
இயக்குநர் வினோத் பற்றி இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரகனி நினைப்பது?: ’இயக்குநர் வினோத் எவ்ளோ சந்தோஷமா இருந்தாலும் சரி, சோகத்துல இருந்தாலும் சரி. அதை வெளியில் காட்டிக் கொள்ளவே மாட்டார். அவருடைய அதிகபட்ச சந்தோஷம். அவருடைய தொடுதலில் தான் தெரியும். நான் ஒரு ஷாட் முடிச்சிட்டு அவர் பக்கதுல உட்கார்ந்தா, நல்லா இருந்தா.... என் கை மேல கை வைப்பார். அதான் அவரோட சந்தோஷம். அது மட்டும் இல்லாமல் வினோத் மிகவும் பொறுமையான மனிதர்.
சக நடிகராவும் இயக்குநராகவும் நடிகர் அஜித் குறித்து உங்கள் கருத்து: பேரன்பான மனிதர். இந்த பிரபஞ்சத்தை அதிகமாக நேசிக்கக் கூடியவர். எங்கேயுமே ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரையும் சமமாக பார்க்கக்கூடிய மனிதர். அவருடைய நல்ல மனதிற்கு தான் அவர் இந்த நிலைமையில் இருக்கிறார்.
துணிவு படத்தில் நீங்க நல்ல போலீஸா..? இல்ல கெட்ட போலீஸா..? நான் நல்ல போலீஸ் தான். எல்லா போலீஸுமே நல்ல போலீஸ் தான், சூழ்நிலை தான் அவங்களை மாத்துது. நான் இந்தப் படத்துல நல்ல போலீஸ் தான்.
ஒரு இயக்குநராக அஜித் ஹீரோவா பார்க்க விருப்பமா? இல்லை வில்லனாக பார்க்க விருப்பமா?: அஜித் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை நன்றாக செய்யக்கூடியவர். அவரை ஹீரோவாக பார்க்கத் தான், நான் விரும்புகிறேன்.
துணிவு வெறும் ஒரு ஆக்ஷன் படமா?: இல்லை.. குடும்பத்தினர் அனைவரும் குழந்தைகளுடன் சென்று பார்க்க வேண்டிய திரைப்படம். குறிப்பாக, பெண்கள் பார்க்க வேண்டிய படம். குடும்பத்திற்காக பணத்தைச் சேர்த்து வைத்து எதிர்காலம் குறித்து வீட்டில் உள்ள பெண்கள் தினமும் ஆயிரம் முறை சிந்திப்பார்கள், அதே போல் தான் ஆண்களும்.
பணத்தைப் பற்றி சிந்திக்காத மனிதர் இல்லை. பணத்தைப் பற்றி சிந்திப்பவர்கள் அனைவரும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். இது மட்டும் இல்லாமல், படத்தில் ஃபேமலி என்டர்டெய்ன்மென்டிற்கான அனைத்தும் இடம் பெற்றுள்ளது. படம் வெளியாகும் போது திரையரங்குகள் திருவிழா போல் காட்சியளிக்கும்.
அஜித் சாருக்கும் உங்களுக்கும் படத்துல ஆக்ஷன் சீன் இருக்கா?: இல்லை.. எனக்கும் அவருக்கும் இடையில் பேரன்பு தான் இருக்கு.
படத்துல அஜித் சாரோட பெயர் என்ன?: அதை நானும் தேடிட்டு தான் இருக்கேன். நடித்த வரை நான், அவரது பெயர் சொல்லி அழைக்கவில்லை. ஆகையால், நானும் உங்களோடு சேர்ந்து அவரது பெயர் என்ன என்பதை தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்’ என்றார்.
இதையும் படிங்க: நாளை வெளியாகும் வாரிசு, துணிவு.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!