ETV Bharat / entertainment

இயக்குநர் அவதாரம் எடுக்கும் ரோபோ சங்கர்... - Actor Robo Shankar has said that he is going to direct a film

திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாக நடிகர் ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் அவதாரம் எடுக்கும் ரோபோ சங்கர்...

author img

By

Published : Aug 20, 2022, 8:00 PM IST

நடிகர் ‘மாஸ்டர்’ மகேந்திரன் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ’அர்த்தம்’ . குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் மகேந்திரன். 90 களில் இருந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த மகேந்திரன் ’விழா’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இந்நிலையில், மணிகண்டன் இயக்குநர் தலகுட்டி என்பவர் இயக்கியுள்ள அர்த்தம் படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் நடிகர் ஷ்ரத்தா தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராதிகா சீனிவாசன் தயாரித்துள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் என்பவர் இசை அமைக்கிறார்.

இயக்குநர் அவதாரம் எடுக்கும் ரோபோ சங்கர்...

இந்த ’அர்த்தம்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் மகேந்திரன், ரோபோ சங்கர், வினோத், ஷ்ரத்தா தாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அதில் பேசிய நடிகர் மாஸ்டர் மகேந்திரன் , “இப்படத்திற்காக இரண்டு ஆண்டுகள் கடினமாக உழைத்துள்ளோம். என் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தை தயாரிப்பாளர் தயாரித்துள்ளார். நான் கேட்டதற்காக ரோபோ சங்கர் உடனே நடித்துக் கொடுத்தார் நன்றி‌” எனப் பேசினார்.

நடிகர் ரோபோ சங்கர் பேசுகையில், “படம்‌ நன்றாக வந்துள்ளது. மகேந்திரன் சிறப்பாக நடித்துள்ளார். மேலும் நான் விரைவில் படம் இயக்க உள்ளேன். அப்படத்திற்கு ’அ...ஆ... 5 நிமிஷம்’ என்று பெயர் ’அதாவது ஆனாது ஆச்சு 5 நிமிஷம்’. இப்போது நடித்துக்கொண்டு இருக்கும் படங்களை முடித்து விட்டு இயக்குவதற்கான பணிகளில் ஈடுபடவுள்ளேன். இப்படத்தில் முன்னணி கலைஞர்கள் பணியாற்ற உள்ளனர்” என்றார்.

இதையும் படிங்க: இளையராஜா பாடல்கள் தன்னம்பிக்கை பாடல்களாக இருந்துள்ளது...இயக்குனர் ரஞ்சித்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.